அறிகுறிகள் எதுவும் இல்லாமல் 5 முறை கரோனா உறுதி செய்யப்பட்ட பாகிஸ்தான் வீரர்!

அறிகுறிகள் இல்லாமல் 5 முறை கரோனா உறுதி செய்யப்பட்ட பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஹாரிஸ் ராஃப் ஒருவழியாக கரோனா பாதிப்பிலிருந்து மீண்டுள்ளார்.
அறிகுறிகள் எதுவும் இல்லாமல் 5 முறை கரோனா உறுதி செய்யப்பட்ட பாகிஸ்தான் வீரர்!

அறிகுறிகள் இல்லாமல் 5 முறை கரோனா உறுதி செய்யப்பட்ட பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஹாரிஸ் ராஃப் ஒருவழியாக கரோனா பாதிப்பிலிருந்து மீண்டுள்ளார். இதன்மூலம் இங்கிலாந்துக்கு விரைவில் செல்லவுள்ளார். 

இங்கிலாந்து - மே.இ. தீவுகள் ஆகிய அணிகளுக்கு இடையிலான மூன்று ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடர் சமீபத்தில் முடிவடைந்தது. கரோனா அச்சுறுத்தல் காரணமாக மூன்று டெஸ்டுகளும் காலி மைதானத்தில் நடைபெற்றன. இதையடுத்து ஆகஸ்ட் - செப்டம்பர் மாதங்களில் இங்கிலாந்தில் 3 டெஸ்ட், 3 டி20 ஆட்டங்களில் பாகிஸ்தான் அணி விளையாடவுள்ளது.

இங்கிலாந்துச் சுற்றுப்பயணத்துக்கான 29 பேர் கொண்ட பாகிஸ்தான் அணி ஜூன் மாதத்தின் முதல் வாரத்தில் அறிவிக்கப்பட்டது. வீரர்கள், பயிற்சியாளர்கள், ஊழியர்கள் என அனைவருக்கும் கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 10 வீரர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று முதலில் உறுதியானது. இதனால் கிரிக்கெட் உலகம் அதிர்ச்சியடைந்தது. இங்கிலாந்து சென்ற பாகிஸ்தான் அணியில் அந்த 10 வீரர்களும் இடம்பெறவில்லை. இதற்குப் பதிலாக 5 மாற்று வீரர்கள் தேர்வு செய்யப்பட்டார்கள். 

10 வீரர்களில், ஆறு வீரர்களுக்கும் இருமுறை நெகடிவ் என முடிவு வந்ததால் அனைவரும் இங்கிலாந்துக்குச் சென்றார்கள். பிறகு மூன்று வீரர்கள் கரோனா பாதிப்பிலிருந்து மீண்டு அவர்களும் இங்கிலாந்து சென்ற நிலையில் வேகப்பந்து வீச்சாளர் ஹாரிஸ் ராஃப் மட்டும் தனியாக பாகிஸ்தானில் மாட்டிக்கொண்டார்.

பாகிஸ்தான் அணிக்குத் தேர்வான அனைவரும் இங்கிலாந்து சென்றுவிட, 26 வயது ஹாரிஸ் ராஃப் மட்டும் 5 முறை கரோனா உறுதி செய்யப்பட்டதால் நொந்துபோனார். இத்தனைக்கும் அவருக்கு கரோனாவுக்கான எந்த அறிகுறிகளும் ஏற்படவில்லை. சொந்த காரணங்களுக்காக அணியிலிருந்து விலகிய முகமது அமிர், ராஃப்புக்குப் பதிலாக மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டார். 

இந்நிலையில் கடைசியாக எடுக்கப்பட்ட இரு பரிசோதனைகளிலும் ராஃப்புக்கு கரோனா இல்லை என்பது உறுதியானது. இதையடுத்து இங்கிலாந்துக்கு விரைவில் செல்லவுள்ளார் ராஃப். டெஸ்ட் அணியில் இடம்பெறாத ராஃப், டி20 அணியில் இடம்பெறவுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com