கடைசிப் பந்து சிக்ஸருக்கு நன்றி: தினேஷ் கார்த்திக்குக்கு வாழ்த்துகளைத் தெரிவித்த கோலி & ரோஹித் சர்மா

இதுவரை 26 டெஸ்டுகள், 94 ஒருநாள், 32 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார்.
கடைசிப் பந்து சிக்ஸருக்கு நன்றி: தினேஷ் கார்த்திக்குக்கு வாழ்த்துகளைத் தெரிவித்த கோலி & ரோஹித் சர்மா

இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக்குக்குப் பிறந்த நாள் வாழ்த்துகளை கோலியும் ரோஹித் சர்மாவும் தெரிவித்துள்ளார்கள்.

தமிழகத்தைச் சேர்ந்த தினேஷ் கார்த்திக் இன்று தனது 35-வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். இதுவரை 26 டெஸ்டுகள், 94 ஒருநாள், 32 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். கடைசியாக 2019 உலகக் கோப்பை அரையிறுதிச் சுற்றில் இந்திய அணிக்காக விளையாடினார்.

பிறந்த நாள் வாழ்த்துகள் தினேஷ் கார்த்திக். இந்த வருடமும் உங்களுக்கு மகிழ்ச்சியும் வெற்றிகளும் வந்து சேரட்டும் என கோலி வாழ்த்தியுள்ளார்.

பிறந்த நாள் வாழ்த்துகள் டிகே. கடைசிப் பந்து சிக்ஸருக்காக நன்றி என்று வாழ்த்தியுள்ளார் ரோஹித் சர்மா.

இதேபோல பிசிசிஐ மற்றும் பிரபல வீரர்களும் தினேஷ் கார்த்திக்குக்குப் பிறந்த நாள் வாழ்த்துகளைக் கூறியுள்ளார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com