விரைவில் தந்தையாகிறார் ஹார்திக் பாண்டியா (படங்கள்)

தான் விரைவில் தந்தையாகப் போவதாக அறிவித்துள்ளார் பிரபல கிரிக்கெட் வீரர் ஹார்திக் பாண்டியா.
விரைவில் தந்தையாகிறார் ஹார்திக் பாண்டியா (படங்கள்)

தான் விரைவில் தந்தையாகப் போவதாக அறிவித்துள்ளார் பிரபல கிரிக்கெட் வீரர் ஹார்திக் பாண்டியா.

இளம் கிரிக்கெட் வீரர் ஹார்திக் பாண்டியா - நடிகை நடாஷா ஸ்டான்கோவிச் ஆகிய இருவருக்கும் கடந்த ஜனவரி மாதம் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

ஹிந்தி பிக் பாஸ் 8 நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை நடாஷா, மும்பையில் வசிக்கும் செர்பியா நாட்டைச் சேர்ந்தவர். நடிப்பு வாய்ப்புக்காக 2012 முதல் இந்தியாவில் வசிக்கும் நடாஷா, சத்யாகிரஹா படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். கிரிக்கெட் வீரர் பாண்டியாவும் நடிகை நடாஷாவும் காதலித்து வந்த நிலையில் புத்தாண்டன்று தனக்கு நடாஷாவுடன் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றதாக பாண்டியா அறிவித்தார்.

இந்நிலையில் தானும் நடாஷாவும் புதிய உறவை எதிர்பார்ப்பதாக சமூகவலைத்தளங்களில் பாண்டியா கூறியுள்ளார். மும்பை ஊடகம் வெளியிட்டுள்ள தகவலின்படி ஊரடங்குக் காலத்தில் நடாஷாவை பாண்டியா திருமணம் செய்துகொண்டுள்ளார்.

விரைவில் தந்தையாகும் பாண்டியாவுக்கு இந்திய கேப்டன் விராட் கோலி, பயிற்சியாளர் ரவி சாஸ்திரி உள்ளிட்ட பிரபலங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com