கேரள ரஞ்சி அணிக்குப் புதிய பயிற்சியாளர்

கேரள ரஞ்சி அணிக்கு இந்திய முன்னாள் வீரர் டினு யோஹன்னன் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கேரள ரஞ்சி அணிக்குப் புதிய பயிற்சியாளர்

கேரள ரஞ்சி அணிக்கு இந்திய முன்னாள் வீரர் டினு யோஹன்னன் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

2001-ல் இந்திய டெஸ்ட் அணியில் இடம்பெற்ற முதல் கேரள வீரர் என்கிற பெயரைப் பெற்றார் டினு யோஹன்னன். மொஹலியில் இங்கிலாந்துக்கு எதிராக விளையாடினார். 2001, 2002 ஆண்டுகளில் இந்திய அணிக்காக 3 டெஸ்டுகள், 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடினார். இரண்டிலும் தலா 5 விக்கெட்டுகளை எடுத்தார். 59 முதல்தர ஆட்டங்களில் 145 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.

இந்நிலையில் கேரள ரஞ்சி அணிக்கு டினு யோஹன்னன் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இணையம் வழியாக நடைபெற்ற கூட்டத்தில் கேரள கிரிக்கெட் சங்கம் இந்த முடிவை எடுத்துள்ளது.

யோஹன்னனுக்கு முன்பு, கேரள அணியின் பயிற்சியாளராக டேவ் வாட்மோர் இருந்தார். அவர் பயிற்சியாளராக இருந்தபோது கேரள அணி 2018-19-ல் முதல்முறையாக ரஞ்சி கோப்பைப் போட்டியில் அரையிறுதிக்குத் தகுதி பெற்றது. அங்கு மூன்று வருடங்கள் பயிற்சியாளராகப் பணியாற்றினார். ஆனால் கடந்த வருட ரஞ்சி கோப்பைப் போட்டியில் பங்கேற்ற 18 அணிகளில் 17-வது இடத்தையே பிடித்தது கேரள அணி. எட்டு ஆட்டங்களில் ஓர் ஆட்டத்தில் மட்டுமே வெற்றி பெற்றது. இதையடுத்து பரோடா அணியின் இயக்குநராக வாட்மோர் நியமிக்கப்பட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com