கால்பந்து தரவரிசையில் இந்திய அணிக்கு 108-வது இடம்
By DIN | Published On : 13th June 2020 02:56 PM | Last Updated : 13th June 2020 02:56 PM | அ+அ அ- |

இந்தியக் கால்பந்து அணி சர்வதேசத் தரவரிசையில் 108-வது இடத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது.
ஆடவர் கால்பந்து அணிகளுக்கான தரவரிசைப்பட்டியலை ஃபிஃபா அமைப்பு வெளியிட்டுள்ளது. பிரான்ஸ், பிரேஸில் அணிகளைத் தாண்டி பெல்ஜியம் அணி தனது முதலிடத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது. நான்காவது, ஐந்தாவது இடங்களில் இங்கிலாந்து, உருகுவே அணிகள் உள்ளன.
கரோனா அச்சுறுத்தல் காரணமாக கால்பந்துப் போட்டிகள் நடைபெறாததால் தரவரிசையில் பெரிய மாறுதல்கள் எதுவும் ஏற்படவில்லை. இந்திய அணி தனது 108-வது இடத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது.
2022 ஃபிஃபா கால்பந்து போட்டிக்கான தகுதிச்சுற்றில் அக்டோபர் 8 அன்று கத்தாரை எதிர்கொள்ளவுள்ளது இந்திய அணி. கரோனா அச்சுறுத்தலால் பல சர்வதேச ஆட்டங்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் இந்திய அணி விளையாடும் முதல் சர்வதேச ஆட்டமாக இது இருக்கும்.