வீர வணக்கம்: எல்லையில் உயிரிழந்த ராணுவத்தினருக்கு சச்சின், கோலி இரங்கல்

ஒரு படை வீரரை விடவும் தன்னலமற்ற, துணிச்சலான ஒருவர் இருக்க முடியாது.
வீர வணக்கம்: எல்லையில் உயிரிழந்த ராணுவத்தினருக்கு சச்சின், கோலி இரங்கல்

எல்லையில் உயிரிழந்த ராணுவத்தினருக்கு சச்சின், கோலி உள்ளிட்ட கிரிக்கெட் வீரர்கள் இரங்கல் தெரிவித்துள்ளார்கள்.

கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் திங்கள்கிழமை இரவு இந்திய-சீனப் படைகள் இடையே ஏற்பட்ட கடும் மோதலில் இந்திய ராணுவத்தின் கா்னல் உள்பட ராணுவத்தினா் 20 போ் உயிரிழந்தனா். இந்த மோதலில் சீன தரப்பில் பலியானோா் மற்றும் காயமடைந்தோா் எண்ணிக்கை 43 என்று உளவுத் தகவல்கள் தெரிவிப்பதாக ஏஎன்ஐ நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. இரு நாட்டு ராணுவத்தினா் இடையேயான மோதலில் உயிரிழப்பு ஏற்படுவது 45 ஆண்டுகளில் இதுவே முதல் முறையாகும்.

எல்லையில் வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு சச்சின், கோலி உள்ளிட்ட கிரிக்கெட் வீரர்கள் இரங்கல் தெரிவித்துள்ளார்கள்.

சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ளதாவது:

நம் நாட்டைக் காப்பாற்ற தங்களுடைய வீரச் செயலால் உயிரிழந்த தியாகிகள் என்றும் நம்மிடையே வாழ்வார்கள். ராணுவ வீரர்களின் தியாகத்துக்காக நம் நாடு துக்கம் அனுசரிக்கிறது, சுயநலமற்ற அவர்களுடைய பெற்றோர், குடும்ப உறுப்பினர்களின் பின்னால் அது நிற்கிறது. ஆழ்ந்த இரங்கல்கள் என்று கூறியுள்ளார்.

விராட் கோலி கூறியதாவது:

நம் நாட்டைக் காப்பாற்றுவதற்காக கல்வான் பள்ளத்தாக்கில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் தியாகத்துக்கு வீர வணக்கம். ஒரு படை வீரரை விடவும் தன்னலமற்ற, துணிச்சலான ஒருவர் இருக்க முடியாது. உயிரிழந்த வீரர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல். இந்தக் கடினமான நேரத்தில் நம்முடைய பிரார்த்தனைகளின் மூலம் அவர்களுக்கு மன நிம்மதி கிடைக்கட்டும் என்று கூறியுள்ளார்.

ரோஹித் சர்மா, கம்பீர், இஷாந்த் சர்மா, சேவாக், யுவ்ராஜ் சிங் போன்ற கிரிக்கெட் வீரர்களும் ராணுவ வீரர்களின் தியாகம் குறித்து ட்வீட்களை வெளியிட்டுள்ளார்கள்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com