கரோனாவால் வேலை இழந்த ஆஸ்திரேலிய பேட்டிங் பயிற்சியாளர்!

2016 முதல் ஆஸ்திரேலிய அணியின் பேட்டிங் பயிற்சியாளராக உள்ள கிரீம் ஹிக்கையும் இந்தப் பட்டியலில் சேர்த்து அனைவரையும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது...
படம் - ஏபி
படம் - ஏபி

கரோனா வைரஸ் பாதிப்பால் உண்டான வருமான இழப்பைச் சரிகட்ட ஆஸ்திரேலிய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் கிரீம் ஹிக்கை நீக்கியுள்ளது கிரிக்கெட் ஆஸ்திரேலியா.

கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் வருமான இழப்பைச் சந்தித்துள்ளது கிரிக்கெட் ஆஸ்திரேலியா. இதையடுத்து 40 பேரை வேலையிலிருந்து நீக்கியுள்ளது. 2016 முதல் ஆஸ்திரேலிய அணியின் பேட்டிங் பயிற்சியாளராக உள்ள கிரீம் ஹிக்கையும் இந்தப் பட்டியலில் சேர்த்து அனைவரையும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது.

தற்போது பல்வேறு சவால்களைச் சந்தித்து வருகிறோம். ஆனால் 40 நல்ல பணியாளர்களை இழப்பது வேதனையை அளிக்கிறது. இதில் அவர்களுடைய தவறு ஒன்றும் இல்லை. ஆனால் இதன்மூலம் கிரிக்கெட் பணிகளில் தொடர்ந்து ஈடுபட இந்த நடவடிக்கையை எடுக்க வேண்டியதாக உள்ளது என்று கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் சேர்மன் ஏர்ல் எட்டிங்ஸ் கூறியுள்ளார். 

கிரிக்கெட் ஆஸ்திரேலியா அமைப்பின் தலைமைச் செயல் அதிகாரி கெவின் ராபர்ட்ஸ் அப்பதவியிலிருந்து சமீபத்தில் விலகினார். இதையடுத்து நிக் ஹாக்லி அப்பதவிக்குத் தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com