பிரபல வீரர் ரஷித் கானின் தாயார் காலமானார்!
By DIN | Published On : 20th June 2020 02:37 PM | Last Updated : 20th June 2020 02:37 PM | அ+அ அ- |

உடல்நலக்குறைவால் தனது தாயார் காலமாகிவிட்டதாக ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த பிரபல வீரர் ரஷித் கான் தெரிவித்துள்ளார்.
ட்விட்டரில் அவர் கூறியதாவது: நீதான் எனது இல்லம் அம்மா. உன்னைத் தவிர எனக்கு வேறு இல்லம் கிடையாது. நீங்கள் இப்போது என்னுடன் இல்லை என்பதை என்னால் நம்பமுடியவில்லை. உங்கள் இழப்பை நான் எப்போதும் உணர்வேன் என்று உருக்கமாகத் தனது தயாரின் மறைவைப் பதிவு செய்துள்ளார்.
சச்சின் டெண்டுல்கர், இர்பான் பதான் உள்ளிட்ட பிரபல வீரர்கள் ரஷித் கானுக்கு ஆறுதல் கூறியுள்ளார்கள். நம்மிடம் அளவில்லாத அன்பு செலுத்தியவரின் இழப்பை எதிர்கொள்வது கடினமானது. உங்களை எப்போதும் அவர் பார்த்துக்கொண்டிருப்பார். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என்னுடைய இரங்கல்கள் என்று சச்சின் கூறியுள்ளார்.
21 வயது ரஷித் கான், ஆப்கானிஸ்தான் அணிக்காக 4 டெஸ்டுகள், 71 ஒருநாள், 48 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். 2017 முதல் ஐபிஎல்-லில் ஹைதராபாத் அணிக்காக விளையாடி வரும் ரஷித் கான் இதுவரை 46 ஐபிஎல் ஆட்டங்களில் பங்கேற்றுள்ளார்.