சாத்தான்குளம் சம்பவம் பற்றி ட்வீட் செய்த ஷிகர் தவன்: ஆயிரக்கணக்கில் பகிர்ந்த ரசிகர்கள்!

கடந்த ஒரு மாதத்தில் ஷிகர் தவன் வெளியிட்ட ட்வீட்களில் இதற்குத்தான் அதிகக் கவனம் கிடைத்துள்ளது.
சாத்தான்குளம் சம்பவம் பற்றி ட்வீட் செய்த ஷிகர் தவன்: ஆயிரக்கணக்கில் பகிர்ந்த ரசிகர்கள்!

சாத்தான்குளம் சம்பவம் பற்றி ட்வீட் செய்த ஷிகர் தவனுக்கு நன்றி தெரிவித்துள்ள ரசிகர்கள், அவருடைய ட்வீட்டை அதிகமாகப் பகிர்ந்துள்ளார்கள்.

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அரசரடி விநாயகா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் ஜெயராஜ் (58). இவா் பழைய பேருந்து நிலையத்தில் மரக்கடை நடத்தி வந்தாா். இவருடைய மகன் பென்னிக்ஸ் (31). இவரும் அதே பகுதியில் செல்லிடப்பேசி கடை நடத்தி வந்தாா். இவா்கள் பொது முடக்க விதிகளை மீறியதாக கூறி போலீஸாரால் கைது செய்யப்பட்டு கடந்த 21-ஆம் தேதி கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டனா். இந்தநிலையில், அவா்கள் இருவரும் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் போலீஸாரால் தாக்கப்பட்டதால்தான் உயிரிழந்ததாகக் கூறி, அவரது உறவினா்கள், பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். தமிழகம் முழுவதும் வியாபாரிகள் கடையடைப்பு நடத்தினா்.

இதையடுத்து, காவல் உதவி ஆய்வாளா்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ், காவலா்கள் முருகன், முத்துராஜ் ஆகியோா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா். காவல் ஆய்வாளா் ஸ்ரீதா் காத்திருப்போா் பட்டியலுக்கு மாற்றப்பட்ட நிலையில், அவரை பணியிடை நீக்கம் செய்து திருநெல்வேலி சரக டி.ஐ.ஜி. பிரவீண்குமாா் அபிநபு உத்தரவிட்டுள்ளாா். இதையடுத்து, சாத்தான்குளம் காவல்நிலைய புதிய ஆய்வாளராக நாகா்கோவில் வடசேரி காவல் ஆய்வாளராகப் பணியாற்றி வந்த பொ்னாா்ட் சேவியா் நியமிக்கப்பட்டு ஞாயிற்றுக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

சாத்தான்குளத்தில் தந்தை, மகன் உயிரிழந்தது தொடர்பான வழக்கு, நீதிமன்ற அனுமதி பெற்று சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றப்படும் என முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

சமூகவலைத்தளங்களில் கடந்த சில நாள்களாக #JusticeForJeyarajAndFenix என்றொரு ஹேஷ்டேக் டிரெண்ட் ஆகிவருகிறது. ஜெயராஜ் - பென்னிக்ஸ் மரணம் தொடர்பாக கிரிக்கெட் ஷிகர் தவன் உள்ளிட்ட திரைப்படத்துறை மற்றும் விளையாட்டுத்துறையைச் சேர்ந்த பிரபலங்கள் பலரும் தங்களுடைய கருத்துகளைப் பதிவு செய்துள்ளார்கள். ஷிகர் தவன், சில நாள்களுக்கு முன்பு ட்விட்டரில் கூறியதாவது:

தமிழ்நாட்டில் ஜெயராஜ் - பென்னிக்ஸ் மீது செலுத்தப்பட்ட குரூரத்தைப் பற்றி கேள்விப்பட்டு மிரண்டுவிட்டேன். இதற்கு எதிராக நாம் குரல் கொடுக்கவேண்டும். அந்தக் குடும்பத்துக்கு நீதி கிடைப்பதை உறுதி செய்யவேண்டும் என்று ட்வீட் வெளியிட்டிருந்தார். 

இந்த விவகாரம் இந்திய அளவில் கவனம் கிடைக்கும்படி செய்ததால் தமிழ்நாட்டைச் சேர்ந்த பலரும் ஷிகர் தவனுக்கு நன்றி தெரிவித்தார்கள். இதன்பிறகு கிரிக்கெட் வீரர்கள் அஸ்வின், ஹர்பஜன் சிங் போன்றோரும் ஜெயராஜ் - பென்னிக்ஸ் விவகாரம் குறித்து தங்களுடைய கருத்துகளைப் பதிவு செய்தார்கள். 

ஷிகர் தவனின் இந்த ட்வீட்டை இதுவரை 21,000 தங்களுடைய ட்விட்டர் கணக்கில் பகிர்ந்துள்ளார்கள். 60,000 பேர் லைக் செய்துள்ளார்கள். கடந்த ஒரு மாதத்தில் ஷிகர் தவன் வெளியிட்ட ட்வீட்களில் இதற்குத்தான் அதிகக் கவனம் கிடைத்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com