ஐசிசி நடுவர் குழுவில் நிதின் மேனன் சேர்ப்பு!

வெங்கட்ராகவன், சுந்தரம் ரவி ஆகியோருக்கு அடுத்து நடுவர் குழுவில் இடம்பெற்ற இந்தியர் என்கிற பெருமையை நிதின் மேனன் அடைந்துள்ளார்.
ஐசிசி நடுவர் குழுவில் நிதின் மேனன் சேர்ப்பு!

2020-21-ம் ஆண்டுக்கான ஐசிசி நடுவர் குழுவில் இந்தியாவைச் சேர்ந்த நிதின் மேனன் சேர்க்கப்பட்டுள்ளார்.

36 வயது நிதின் மேனன், 3 டெஸ்டுகள், 24 ஒருநாள், 16 டி20 ஆட்டங்களில் நடுவராகப் பணியாற்றியுள்ளார். வெங்கட்ராகவன், சுந்தரம் ரவி ஆகியோருக்கு அடுத்து நடுவர் குழுவில் இடம்பெற்ற இந்தியர் என்கிற பெருமையை நிதின் மேனன் அடைந்துள்ளார்.

2020-21-ம் ஆண்டுக்கான ஐசிசி நடுவர் குழுவின் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் நிதின் மேனின் பெயர் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளது.

இதுபற்றி நிதின் மேனன் கூறியதாவது:

ஏற்கெனவே சர்வதேச ஆட்டங்களில் நடுவராகப் பணியாற்றியதால் இந்தப் பணியிலுள்ள பொறுப்புகளை நான் அறிவேன். சவால்களை எதிர்கொண்டு சிறப்பாகப் பணியாற்ற காத்திருக்கிறேன். என்னுடைய அனுபவங்களை மற்ற இந்திய நடுவர்களிடம் பகிர்ந்துகொண்டு, அதன்மூலம் அவர்களுடைய முன்னேற்றத்துக்கும் நான் உதவிடவேண்டும்.

மத்திய பிரதேச கிரிக்கெட் சங்கம், பிசிசிஐ, ஐசிசி ஆகியோருக்கு என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com