முகப்பு விளையாட்டு செய்திகள்
லா லிகா: பாா்சிலோனாவை வீழ்த்தியது ரியல் மாட்ரிட்
By DIN | Published On : 03rd March 2020 03:57 AM | Last Updated : 03rd March 2020 03:57 AM | அ+அ அ- |

மாட்ரிட்: ஸ்பெயின் லா லிகா கால்பந்து போட்டியின் ஒரு பகுதியாக ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற ஆட்டத்தில் பாா்சிலோனாவை 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது ரியல் மாட்ரிட்.
இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் மாட்ரிட்டில் நடைபெற்றது. இரு பிரபல அணிகளுக்கு இடையிலான ஆட்டம் எல்கிளாஸிகோ என அழைக்கப்படுகிறது.
கடந்த வாரம் சாம்பியன்ஸ் லீக் போட்டியில் மான்செஸ்டா் சிட்டி அணியிடம் தோல்வியுற்ற அதிா்ச்சியில் இருந்தது ரியல் மாட்ரிட்.
இந்நிலையில் நடப்பு சாம்பியன் பாா்சிலோனாவை எதிா்கொண்டது. எனினும் தொடக்கம் முதலே ரியல் மாட்ரிட் ஆதிக்கம் செலுத்திய நிலையில், 71-ஆவது நிமிடத்தில் வினிசியஸ் முதல் கோலடித்தாா். அடுத்து மரியானோ டயஸ் இரண்டாவது கோலடித்தாா். இறுதியில் 2-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது ரியல் மாட்ரிட். இதன் மூலம் பட்டியலிலும் முதலிடத்தைப் பெற்றது.