மகளிர் டி20 உலகக் கோப்பை இறுதிச்சுற்றில் இந்தியா - ஆஸ்திரேலியா மோதல்!

மகளிர் டி20 உலகக் கோப்பை இறுதிச்சுற்றில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதவுள்ளன.
மகளிர் டி20 உலகக் கோப்பை இறுதிச்சுற்றில் இந்தியா - ஆஸ்திரேலியா மோதல்!

மகளிர் டி20 உலகக் கோப்பை இறுதிச்சுற்றில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதவுள்ளன.

ஆஸ்​தி​ரே​லி​யா​வில் நடை​பெற்று வரும் 7-ஆவது மக​ளிர் டி20 உ​ல​கக் கோப்பை போட்டியில் அரையிறுதிச் சுற்றில் இந்​தி​யா- இங்கிலாந்து அணி​க​ளும், நடப்பு சாம்​பி​யன் ஆஸி.-​தென் ஆப்​பி​ரிக்க அணி​க​ளும் மோதின.

மழையால் இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதி ஆட்டம் ரத்தானதால், மகளிர் டி20 உலகக் கோப்பை இறுதிச்சுற்றுக்கு முதல்முறையாக முன்னேறியது இந்திய அணி.

ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்த இன்றைய ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து இந்திய அணி முதல்முறையாக மகளிர் டி20 உலகக் கோப்பையின் இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது. குரூப் ஏ பி​ரி​வில் 4 ஆட்டங்​க​ளில் வென்ற நிலை​யில், இந்​தியா நேராக இறு​திக்​குள் நுழைந்துள்ளது. 

இதன்பிறகு நடைபெற்ற ஆஸ்திரேலியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. 

முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா, 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 134 ரன்கள் எடுத்தது. கேப்டன் லேனிங் 49 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். மழையால் ஆட்டம் தடைபட்டதால் ஓவர்கள் குறைக்கப்பட்டன. தென் ஆப்பிரிக்க அணி வெற்றி பெற, 13 ஓவர்களில் 98 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

பரபரப்பாக நடைபெற்ற ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணி, 13 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 92 ரன்கள் மட்டும் எடுத்தது. இதனால் ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்று இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெற்றது.

மார்ச் 8 அன்று மெல்போர்னில் நடைபெறவுள்ள மகளிர் டி20 உலகக் கோப்பை இறுதிச்சுற்றில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதவுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com