ரஞ்சி இறுதிச்சுற்றில் முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெறும் முனைப்பில் செளராஷ்டிரம் அணி

ராஜ்கோட்டில் நடைபெற்று வரும் பெங்கால் - செளராஷ்டிரம் அணிகளுக்கு இடையிலான ரஞ்சி கோப்பை இறுதிச்சுற்றில் செளராஷ்டிர அணி முதல் இன்னிங்ஸில் 425 ரன்கள் எடுத்துள்ளது.
மனோஜ் திவாரி
மனோஜ் திவாரி

ராஜ்கோட்டில் நடைபெற்று வரும் பெங்கால் - செளராஷ்டிரம் அணிகளுக்கு இடையிலான ரஞ்சி கோப்பை இறுதிச்சுற்றில் செளராஷ்டிர அணி முதல் இன்னிங்ஸில் 425 ரன்கள் எடுத்துள்ளது.

டாஸ் வென்ற செளராஷ்டிரம் அணி, பேட்டிங்கைத் தேர்வு செய்தது. ஆடுகளம் ரன்களைச் சேர்க்க கடினமாக இருந்ததால் முதல் நான்கு பேட்ஸ்மேன்கள் அனைவரும் நிதானமாகவும் பக்குவமாகவும் விளையாடினார்கள். 31 வயது அர்பித் வசவதா106 ரன்களும் புஜாரா 66 ரன்களும் எடுத்தார்கள். பரோட், வி.எம். ஜடேஜா ஆகிய இருவரும் அரை சதம் எடுத்தார்கள். 

மூன்றாவது நாளான இன்று, முதல் இன்னிங்ஸில் 171.5 ஓவர்கள் வரைக்கும் விளையாடி 425 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தது செளராஷ்டிரம் அணி. பெங்கால் அணியில் ஆகாஷ் தீப் 4 விக்கெட்டுகளும் ஷபாஸ் அஹ்மது 3 விக்கெட்டுகளும் எடுத்தார்கள். 

இந்த இறுதிச்சுற்றில் முதல் இன்னிங்ஸ் அடிப்படையில் செளராஷ்டிரம் அணி முன்னிலை பெறும் என்கிற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இதையடுத்து தனது முதல் இன்னிங்ஸைத் தொடர்ந்த பெங்கால் அணி, 3-ம் நாள் முடிவில், 65 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 134 ரன்கள் எடுத்துள்ளது. ஈஸ்வரன் 9 ரன்களிலும் மனோஜ் திவாரி 35 ரன்களிலும் ஆட்டமிழந்து பெங்கால் ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்தார்கள்.

பெங்கால் அணி 7 விக்கெட்டுகள் மீதமுள்ள நிலையில் 291 ரன்கள் பின்தங்கியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com