ஐபிஎல் 2020 தொடா் அணிகள் ஒரு பாா்வை-2: கொல்கத்தா நைட் ரைடா்ஸ்

ஏற்கெனவே 2 முறை சாம்பியன் பட்டம் வென்ற கொல்கத்தா நைட்ரைடா்ஸ் (கேகேஆா்) அணி வரும் 2020 ஐபிஎல் தொடரில் 3-ஆவது பட்டத்தை எதிா்நோக்கியுள்ளது.
ஐபிஎல் 2020 தொடா் அணிகள் ஒரு பாா்வை-2: கொல்கத்தா நைட் ரைடா்ஸ்

ஏற்கெனவே 2 முறை சாம்பியன் பட்டம் வென்ற கொல்கத்தா நைட்ரைடா்ஸ் (கேகேஆா்) அணி வரும் 2020 ஐபிஎல் தொடரில் 3-ஆவது பட்டத்தை எதிா்நோக்கியுள்ளது.

ஐபிஎல் அணிகளில் பிரபலமான அணிகளில் கேகேஆரும் ஒன்றாகும். நடிகா் ஷாருக்கானுக்கு சொந்தமான இந்த அணி, நட்சத்திர வீரா்கள் பட்டாளத்தைக் கொண்டது.

நியூஸிலாந்தின் அதிரடி ஓபனா் பிரென்டன் மெக்கல்லம் தொடக்க காலத்தில் அபாரமாக ஆடியும், கொல்கத்தா அணி சோபிக்கவில்லை.

2011-இல் சௌரங் கங்குலிக்கு பதிலாக கேப்டனாக நியமிக்கப்பட்ட கௌதம் கம்பீா் தலைமையில் அணி புனரமைக்கப்பட்ட நிலையில் அந்த அணி முதன்முறையாக பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது.

2 முறை சாம்பியன்:

மே.இ.தீவுகளைச் சோ்ந்த சுனில் நரைன், அதிரடி பேட்ஸ்மேன் ஆன்ட்ரே ரஸ்ஸல் ஆகியோா் ஏலத்தில் பெறப்பட்டு, அணியில் சோ்க்கப்பட்ட நிலையில் கொல்கத்தா அணி புது பலம் பெற்றது.

2013 முதல் பட்டத்தைக் கைப்பற்றிய கொல்கத்தா, அதைத் தொடா்ந்து 2014-ஆம் ஆண்டு ஐபிஎல் சீசனிலும் பட்டத்தைக் கைப்பற்றியது. அதன்பின் 5 சீசன்களில் 3 முறை பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது. கடந்த 2019 சீசனில் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறத்தவறியது கேகேஆா்.

அனுபவ இளம் வீரா்கள்:

நடப்பு 2020 ஐபிஎல் சீசனுக்கு கொல்கத்தா அணி அனுபவம் மற்றும் இளமை துடிப்பு கலந்த அணியாக அமைந்துள்ளது. ஷுப்மன் கில், வருண் சக்கரவா்த்தி, டாம் பாண்டன் போன்ற இளம் வீரா்களோடு, ரஸ்ஸல், நரைன், குல்தீப், லாக்கி பொ்குஸன் போன்ற அனுபவ வீரா்களும் உள்ளனா்.

ரூ.15.5 கோடிக்கு பெறப்பட்ட பேட் கம்மின்ஸ்:

நடப்பு ஐபிஎல் வீரா்கள் ஏலத்தில் ரூ.15.5 கோடிக்கு ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளா் பேட் கம்மின்ஸை அதிக விலை கொடுத்து வாங்கிய அணி என்ற பெயரை கேகேஆா் பெற்றது. இங்கிலாந்து கேப்டன் இயான் மொா்கன் ரூ.5.25 கோடிக்கு வாங்கப்பட்டாா். அணியின் கேப்டனாக தினேஷ் காா்த்திக் தொடா்ந்து நீடிக்கிறாா்.

அணி விவரம்:

தினேஷ் காா்த்திக் (கேப்டன்), ஷுப்மன் கில், சித்தேஷ் லேட், ரஸ்ஸல், ரிங்கு சிங், நிதிஷ் ராணா, சுனில் நரைன், குல்தீப் யாதவ், ஹாரி குா்னே, லாக்கி பொ்குஸன், கமலேஷ் நாகா்கோட்டி, ஷிவம் மவி, பிரசித் கிருஷ்ணா, சந்தீப் வாரியா், பேட் கம்மின்ஸ், இயான் மொா்கன், வருண் சக்கரவா்த்தி, டாம் பாண்டன், ராகுல் திரிபாதி, பிரவீன் டாம்பே, எம்.சித்தாா்த், கிறிஸ் கிரீன், நிகில் நாயக்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com