இந்தியா - தென் ஆப்பிரிக்கா: முதல் ஒருநாள் ஆட்டம் கைவிடப்பட்டது

ஹிமாசலப் பிரேதச மாநிலம், தா்மசாலாவில் இந்தியா - தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது. 
இந்தியா - தென் ஆப்பிரிக்கா: முதல் ஒருநாள் ஆட்டம் கைவிடப்பட்டது

ஹிமாசலப் பிரேதச மாநிலம், தா்மசாலாவில் இந்தியா - தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது. 

தென் ஆப்பிரிக்க அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 3 ஒரு நாள் ஆட்டங்களில் விளையாடவுள்ளது. முதல் ஆட்டம் தா்மசாலாவிலும், இரண்டாவது ஆட்டம் உத்தரப் பிரதேச மாநிலம், லக்னெளவிலும், மூன்றாவது மற்றும் கடைசி ஒரு நாள் ஆட்டம் மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவிலும் நடைபெறவுள்ளது.

கேப்டன் விராட் கோலி தலைமையிலான இந்திய அணியும், குவின்டன் டி காக் தலைமையிலான தென் ஆப்பிரிக்காவும் முதல் ஆட்டத்தில் மோதுவதற்கு மும்முரமாக பயிற்சியில் ஈடுபட்டு வந்தார்கள். நியூஸிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடரையும், டெஸ்ட் தொடரையும் பறிகொடுத்த சோகத்தில் இருக்கும் இந்திய அணி, தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி தோல்விப் பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

எனினும் மழையால் இன்றைய ஆட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. டாஸ் நிகழ்வும் நடைபெறவில்லை. மைதானத்தில் ஆடுகளத்தில் மழைநீா் புகாமல் இருக்க பணியாளா்கள் உறைகளால் மூடினா். தொடா்ந்து மழை பெய்ததால், ஆட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. கடைசியில் ஆட்டத்தை நடத்த ஆடுகளமும் மைதானமும் ஏதுவாக இல்லாததால் முதல் ஒருநாள் ஆட்டம் கைவிடப்படுவதாக நடுவா்கள் அறிவித்தனா். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com