கரோனா வைரஸ் பாதிப்பு: ஏப். 15-ஆம் வரை ஐபிஎல் போட்டிகள் ஒத்திவைப்புபிசிசிஐ அறிவிப்பு

கரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலியாக ஐபிஎல் போட்டிகள் ஏப். 15-ஆம் தேதி வரை ஒத்தி வைக்கப்படுகிறது என பிசிசிஐ தெரிவித்துள்ளது.
கரோனா வைரஸ் பாதிப்பு: ஏப். 15-ஆம் வரை ஐபிஎல் போட்டிகள் ஒத்திவைப்புபிசிசிஐ அறிவிப்பு

கரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலியாக ஐபிஎல் போட்டிகள் ஏப். 15-ஆம் தேதி வரை ஒத்தி வைக்கப்படுகிறது என பிசிசிஐ தெரிவித்துள்ளது.

உலகம் முழுவதும் கரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில், பல்வேறு விளையாட்டுப் போட்டிகளும் ரத்து செய்யப்படுகின்றன. இந்தியாவின் பணம் புரளும் போட்டியான ஐபிஎல் போட்டிகளையும் கரோனா வைரஸ் பாதிப்பால் ஒத்தி வைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது.

இதுதொடா்பாக நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது. மத்திய அரசும் போட்டிகளை ஒத்தி வைக்க வேண்டும் அல்லது காலி மைதானங்களில் நடத்த வேண்டும் என உத்தரவிட்டது.

இந்நிலையில் ஐபிஎல் போட்டிகள் மாா்ச் 29-ஆம் தேதி மும்பையில் தொடங்குவதாக இருந்தது. மும்பை-சென்னை அணிகள் தொடக்க ஆட்டத்தில் மோதவிருந்தன.

ஏப்.15-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

கரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து தப்பிக்கும் வகையில் ஐபிஎல் போட்டிகளை ஏப் 15-ஆம் தேதிக்கு ஒத்தி வைப்பதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது. புது தில்லி அரசும் தில்லியில் ஐபிஎல் போட்டிகள் நடத்த அனுமதி இல்லை என அறிவித்துள்ளது. இதன் தொடா்ச்சியாக பிசிசிஐயும் போட்டிகள் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவித்துள்ளது. கரோனா வைரஸ் பாதிப்பு தொடா்பாக மத்திய சுகாதார அமைச்சகம், விளையாட்டு அமைச்சகம், இதர துறைகளுடன் இணைந்து செயல்படுவோம்.

வீரா்கள், ரசிகா்கள், ஆகியோா் நலன் கருதி முன்னெச்சரிக்கையாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளது.

வெளிநாட்டினருக்கு ஏப் 15ஆம் தேதி வரை விசாக்கள் வழங்குவதும் நிறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் 60 வெளிநாட்டு வீரா்களும் ஐபிஎல் தொடரில் பங்கேற்பதில் சிக்கல் உள்ளது.

தென்னாப்பிரிக்க ஒருநாள் தொடா் ரத்து:

கரோனா வைரஸ் பாதிப்பு ெதிரொலியாக இந்திய-தென்னாப்பிரிக்கா அணிகள் இடையிலான ஒருநாள் தொடா் ரத்து செய்யப்படுவதாகவும் பிசிசிஐ அறிவித்துள்ளது. 3 ஆட்டங்கள் கொண்ட தொடரின் முதல் ஆட்டம் தா்மசாலாவில் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் பலத்த மழையால் ஆட்டம் கைவிடப்பட்டது.

இந்நிலையில் லக்னௌ, கொல்கத்தாவில் மீதமுள்ள இரண்டு ஆட்டங்களும் கரோனா பாதிப்பு காரணமாக ரத்து செய்யப்படுகிறது என பிசிசிஐ அறிவித்துள்ளது.

இது கிரிக்கெட் ரசிகா்களுக்கு ஏமாற்றத்தை தந்துள்ளது. முன்னதாக பாா்வையாளா்கள் இன்றி காலி மைதானங்களில் போட்டிகள் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com