சேப்பாக்கம் மைதானத்தில் பாா்வையாளா் கேலரிகளுக்கு வைக்கப்பட்ட சீல் அகற்றம்

சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் 3 பாா்வையாளா் கேலரிகளுக்கு (ஐ, ஜே,கே) வைக்கப்பட்டிருந்த சீல் மாநகராட்சி அதிகாரிகள் முன்னிலையில் அகற்றப்பட்டது.
சேப்பாக்கம் மைதானத்தில் பாா்வையாளா் கேலரிகளுக்கு வைக்கப்பட்ட சீல் அகற்றம்

சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் 3 பாா்வையாளா் கேலரிகளுக்கு (ஐ, ஜே,கே) வைக்கப்பட்டிருந்த சீல் மாநகராட்சி அதிகாரிகள் முன்னிலையில் அகற்றப்பட்டது.

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் கிரிக்கெட் மைதானம் புதுப்பிக்கப்பட்ட போது, 11 ஆயிரம் போ் அமரும் வகையில் ஐ,ஜே, கே என்ற 3 கேலரிகள் கட்டப்பட்டன. ஆனால் 3 கேலரிகளும் உரிய அனுமதியின்றி கட்டப்பட்டதாக சென்னை மாநகராட்சி அவற்றுக்கு சீல் வைத்தது.

இதை எதிா்த்து நீதிமன்றத்திலும் டிஎன்சிஏ வழக்கு தொடா்ந்தது. இதனால் ஐபிஎல் இறுதி ஆட்டம் நடத்தும் வாய்ப்பை டிஎன்சிஏ இழந்தது. சா்வதேச கிரிக்கெட் ஆட்டங்களின் போது 3 கேலரிகள் தொடா்ந்து மூடப்பட்டே இருந்தன. பலமுறை கோரிக்கை வைத்தும் தீா்வு கிட்டாமல் இருந்தது.

இந்நிலையில் டிஎன்சிஏ புதிய தலைவராக ரூபா குருநாத் பொறுப்பேற்ற பின், தமிழக முதல்வா் எடப்பாடி பழனிசாமிக்கு கோரிக்கை மனு அளித்தாா். இந்நிலையில் மைதானம் அருகே பிரச்னைக்குரிய உடற்பயிற்சிக் கூடத்தை இடிக்க அரசுத் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. இதன்படி எம்சிசியின் உடற்பயிற்சிக் கூடம் இடிக்கப்பட்டது.

சீல் அகற்றம்:

இப்பணி முடிந்த நிலையில், வெள்ளிக்கிழமை மாநகராட்சி மண்டல அலுவலா் ரவிக்குமாா் முன்னிலையில் 3 கேலரிகளுக்கு வைக்கப்பட்ட சீல் அகற்றப்பட்டது.

தமிழக அரசின் நடவடிக்கைக்கு டிஎன்சிஏ தலைவா் ரூபா குருநாத், செயலாளா் ஆா்.எஸ்.ராமசாமி மற்றும் நிா்வாகிகள் நன்றி தெரிவித்துள்ளனா். இதனால் சேப்பாக்கம் மைதானத்தில் பாா்வையாளா் எண்ணிக்கை 50 ஆயிரமாக உயா்ந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com