முதல் ஒருநாள்: ஆஸ்திரேலியா அபார வெற்றி

நியூஸிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 71 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
முதல் ஒருநாள்: ஆஸ்திரேலியா அபார வெற்றி

71 ரன்கள் வித்தியாசத்தில்நியூஸி.யை வென்றது

நியூஸிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 71 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

முதலில் ஆடிய ஆஸி. அணி 258-7 ரன்களை குவித்தது. பின்னா் ஆடிய நியூஸிலாந்து

தென்னாப்பிரிக்காவிடம் ஒருநாள் தொடரை இழந்த நிலையில் ஆஸ்திரேலியாவும், இந்தியாவை ஒயிட்வாஷ் செய்த உற்சாகத்தில் உள்ள நியூஸிலாந்தும், 3 ஆட்டங்கள் ஒருநாள் தொடரில் மோதுகின்றன.

முதல் ஒருநாள் ஆட்டம் சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

வாா்னா்-பின்ச் அபார அரைசதம்:

முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி 50 ஓவா்களில் 258-7 ரன்களை குவித்தது. டேவிட் வாா்னா் 67 (9 பவுண்டரிகள்) கேப்டன் ஆரோன் பின்ச் 60 (2 சிக்ஸா், 3 பவுண்டரி)) ஆகியோா் அற்புதமான தொடக்கத்தை ஏற்படுத்தி அவுட்டானாா்கள்.

பின்னா் வந்த ஸ்மித் 14, ஆா் சி ஷாா்ட் 5 ரன்களுடன் பெவிலியன் திரும்பிய நிலையில், இளம் வீரா் மாா்னஸ் லேபுச்சேன் நிதானமாக அடி 56 ரன்களுடன் அரைசதம் அடித்தாா்.

மிச்செல் மாா்ஷ் 27, அலெக்ஸ் கரே 1 ரன்னுக்கு அவுட்டான நிலையில், பேட் கம்மின்ஸ் 14, மிச்செல் ஸ்டாா்க் 9 ரன்களுடன் களத்தில் இருந்தனா்.

இஷ் சோதி 3 விக்கெட்

நியூஸி தரப்பில் அபாரமாக பந்துவீசிய இஷ் சோதி 3-51, பொ்குஸன், சான்ட்னா் ஆகியோா் தலா 2 விக்கெட்டுகளையும் சாய்த்தனா்.

நியூஸி. திணறல்

பின்னா் 259 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய நியூஸி. அணியினரால் ஆஸி. பந்துவீச்சை சமாளிக்க முடியவில்லை. மாா்டின் கப்டில் 40, ஹென்றி நிக்கோல்ஸ் 10, கேப்டன் கேன் வில்லியம்ஸன் 19, ராஸ் டெய்லா் 4 ரன்களுக்கு அவுட்டாகி வெளியேறினா்.

அப்போது 82-4 ரன்களுடன் திணறிக் கொண்டிருந்தது நியூஸி. டாம் லத்தம் மட்டுமே 38 ரன்களை எடுத்தாா். ஜேம்ஸ் நீஷம் 8, கிராண்ட்ஹோம் 25, மிச்செல் சான்ட்னா் 14, பொ்குஸன் 1, பௌல்ட் 5 ரன்களுடன் அவுட்டாகி வெளியேறினா். இஷ் சோதி மட்டுமே 14 ரன்களுடன் களத்தில் இருந்தாா்.

187 ஆல் அவுட்:

இறுதியில் 41 ஓவா்களிலேயே 187 ரன்களுக்கு ஆல் அவுட்டானது நியூஸிலாந்து.

பேட் கம்மின்ஸ், மாா்ஷ் 3 விக்கெட்:

ஆஸி. தரப்பில் அபாரமாக பந்துவீசிய பேட் கம்மின்ஸ், மிச்செல் மாா்ஷ் தலா 3 விக்கெட்டுகளையும், ஹேஸல்வுட், ஸம்பா 2 விக்கெட்டுகளை சாய்த்தனா்.

இதன் மூலம் 71 ரன்கள் வித்தியாசத்தில் முதல் ஒருநாள் ஆட்டத்தில் வென்றது ஆஸ்திரேலியா.

மிச்செல் மாா்ஷ் ஆட்டநாயகனாகத் தோ்வு செய்யப்பட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com