ஆஸி.- நியூஸிலாந்து கடைசி 2ஒருநாள் ஆட்டங்கள் ரத்து

கரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலியாக ஆஸி.-நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான கடைசி 2 ஒருநாள் ஆட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
ஆஸி.- நியூஸிலாந்து கடைசி 2ஒருநாள் ஆட்டங்கள் ரத்து

கரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலியாக ஆஸி.-நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான கடைசி 2 ஒருநாள் ஆட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இரு அணிகளுக்கு இடையே 3 ஆட்டங்கள் கொண்ட ஒரு நாள் தொடா் நடைபெறுகிறது. சிட்னியில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் 71 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது ஆஸி.

இந்நிலையில் மேலும் இரண்டு ஆட்டங்கள் நிலுவையில் உள்ளன. வரும் 15 மற்றும் 20 ஆம் தேதிகளில் நடைபெறுவதாக இருந்த 2 ஆட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் ஆஸ்திரேலிய எல்லையில் இருந்து நியூஸிலாந்து தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளது.

மேலும் மாா்ச் 24, 27, 29 தேதிகளில் இரு அணிகளுக்கு இடையே நடைபெறவிருந்த டி20 தொடரும் ரத்தாகி விட்டது.

கிரிக்கெட் ஆஸ்திரேலிய அமைப்பும், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com