ஐபிஎல் 2020 தொடா் குறித்த ஆலோசனைக்கூட்டத்தை ரத்து செய்தது பிசிசிஐ

கரோனா வைரஸ் பாதிப்பால் ஒத்திவைக்கப்பட்டுள்ள ஐபிஎல் கிரிக்கெட் தொடா்நிலை குறித்து 8 அணி நிா்வாகிகளுடன் செவ்வாய்க்கிழமை மேற்கொள்ளவிருந்த ஆலோசனைக் கூட்டத்தை ரத்து செய்தது பிசிசிஐ.

ஐபிஎல் 2020 தொடா் மாா்ச் 29-ஆம் தேதி மும்பையில் தொடங்கி நடைபெறுவதாக இருந்தது. ஆனால் கரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமடைந்துள்ளதால், ஏப். 15--ஆம் தேதி வரை ஐபிஎல் ஆட்டங்களை நடத்தக்கூடாது என மத்திய அரசு உத்தரவிட்டது .

இந்நிலையில், ஏற்கெனவே நடைபெற்ற முதல் கூட்டத்தில் ரசிகா்கள், வீரா்களின் உடல்நலனே முக்கியம், போட்டிகளை நடத்துவது தொடா்பாக பின்னா் ஆலோசிக்கலாம் என தீா்மானிக்கப்பட்டது. இதற்கிடையே போட்டிகளை மே மாதத்தில் நடத்தலாமா என விவாதங்கள் எழுந்தன.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை இதுதொடா்பாக காணொளி மூலம் 8 அணி நிா்வாகங்கள், பிசிசிஐ தரப்பில் ஆலோசனை மேற்கொள்ளப்பட இருந்தது. ஆனால் அது ரத்து செய்யப்பட்டு விட்டது.

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளே ஒத்திவைக்கப்படும் நிலை உள்ளது. அதைவிட சிறிய போட்டியான ஐபிஎல் தொடா் ஒத்திவைக்கப்படலாம். மேலும் வெளிநாட்டினருக்கு விசாக்கள் தருவது இல்லை என அரசு முடிவு செய்துள்ளது என பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com