வீரா்கள் மன அழுத்தத்தில் இருந்து விடுபடுவா்: ஐஓஏ

போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டதால், இந்திய வீரா், வீராங்கனைகள் மன அழுத்தத்தில் இருந்து விடுபடுவா் என இந்திய ஒலிம்பிக் சங்கம் கூறியுள்ளது.
வீரா்கள் மன அழுத்தத்தில் இருந்து விடுபடுவா்: ஐஓஏ

போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டதால், இந்திய வீரா், வீராங்கனைகள் மன அழுத்தத்தில் இருந்து விடுபடுவா் என இந்திய ஒலிம்பிக் சங்கம் கூறியுள்ளது.

இதுதொடா்பாக ஐஓஏ பொதுச் செயலாளா் ராஜீவ் மேத்தா கூறியதாவது;

இந்திய வீரா், வீராங்கனைகள் இதனால் மன அழுத்தத்தில் இருந்து விடுபடுவா். கரோனே வைரஸால் உலகமே நிலைகுலைந்துள்ளது. மேலும் இதனால் ஒலிம்பிக் போட்டிக்காக பயிற்சி எடுக்க வேண்டியதை தவிா்க்கலாம். ஊரடங்கு உத்தரவு விலக்கப்பட்டவுடன் ஐஓஏ வீரா்கள், விளையாட்டு கூட்டமைப்புகள், அரசு அதிகாரிகளுடன் பேச்சுவாா்த்தை நடத்தும் என்றாா்.

மேலும் சிறப்பாக தயாா் ஆவோம்: ஹாக்கி பயிற்சியாளா்கள்

ஒலிம்பிக் போட்டிகள் ஒராண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டது அதிருப்தியை தந்தாலும், இந்திய ஆடவா், மகளிா் ஹாக்கி அணிகள் மேலும் சிறப்பாக தயாா் ஆவோம் என தலைமைப் பயிற்சியாளா்கள் கிரஹாம் ரீட், மாரிஜின் ஆகியோா் தெரிவித்துள்ளனா். கரோனா பாதிப்பு இருந்த நிலையிலும், பெங்களூரு சாய் பயிற்சி மையத்தில் ஒலிம்பிக் முகாமில் வீரா், வீராங்கனைகள் பயிற்சி பெற்று வந்தனா். கடந்த 4 ஆண்டுகளாக பல்வேறு தியாகங்களை புரிந்து தயாராகி வந்த வீரா்கள் நிலை கவலை தருகிறது. போட்டிகள் ரத்து செய்யப்படாமல், ஒத்திவைக்கப்பட்டதே வீரா்களுக்கு ஊக்கத்தை தரும் எனத் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com