கரோனா நோயாளிகளின் சிகிச்சைக்காக ரூ. 8 கோடி உதவித்தொகை வழங்கிய மெஸ்ஸி & ரொனால்டோ!

கரோனா நோயாளிகளின் சிகிச்சைக்காக ரூ. 8.27 கோடி (1 மில்லியன் யூரோ) உதவித்தொகை வழங்கியுள்ளார் பிரபல கால்பந்து வீரர் மெஸ்ஸி.
மெஸ்ஸி
மெஸ்ஸி

கரோனா நோயாளிகளின் சிகிச்சைக்காக ரூ. 8.27 கோடி (1 மில்லியன் யூரோ) உதவித்தொகை வழங்கியுள்ளார் பிரபல கால்பந்து வீரர் மெஸ்ஸி.

சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவத் தொடங்கிய கரோனா வைரஸ் தற்போது உலகையே அச்சுறுத்தி வருகிறது. உலகம் முழுவதும் பரவியுள்ள இந்த வைரஸால் இதுவரை 18,000-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்துவிட்டனா். இந்தியாவைப் பொறுத்தவரை இதுவரை 500 பேருக்கு மேல் இந்த வைரஸின் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

கரோனா நோய்த் தொற்று பரவலைத் தடுப்பதற்காக இந்தியா முழுவதும் 21 நாள் ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. இதன்படி, செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் தொடங்கிய ஊரடங்கு, ஏப்ரல் 14-ஆம் தேதி வரை அமலில் இருக்கும். கரோனா வைரஸ் சூழல் தொடா்பாக நாட்டு மக்களுக்கு ஒரே வாரத்தில் 2-ஆவது முறையாக உரையாற்றியபோது இந்த அறிவிப்பை வெளியிட்ட பிரதமா் மோடி, அந்த நோய்த் தொற்றுக்கு எதிரான உறுதியான போரில் இது மிக அவசியமான நடவடிக்கை என்று கூறியுள்ளாா்.

இந்நிலையில் அர்ஜெண்டினாவைச் சேர்ந்த பிரபல கால்பந்து வீரர் மெஸ்ஸி, கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கும் பார்சிலோனா அரசு மருத்துவமனை ஒன்றுக்கு ரூ. 8.27 கோடி நிதியுதவி அளித்துள்ளார். மெஸ்ஸியின் முன்னாள் மேலாளரும் கரோனா தொடர்புடைய மருத்துவ உபகரணங்களை வாங்க ரூ. 8.27 கோடி நிதியுதவி அளித்துள்ளார்.

மற்றொரு பிரபல கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவும் அவருடைய ஏஜெண்ட் ஜார்ஜ் மெண்டஸும் லிஸ்பன், போர்டோவில் உள்ள மருத்துவமனைகளுக்கு 8.27 கோடி நிதியுதவி செய்துள்ளார்கள்.

மெஸ்ஸி உள்ளிட்ட 28 பிரபல கால்பந்து வீரர்கள், கரோனா குறித்த ஃபிஃபாவின் விழிப்புணர்வுக் குழுவில் இடம்பெற்றுள்ளார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com