தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரிய ஒப்பந்த பட்டியலில் ஸ்டெயின் நீக்கம்

தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரிய ஒப்பந்தப் பட்டியலில் இருந்து அதிரடி வேகப்பந்து வீச்சாளா் டேல் ஸ்டெயின் பெயா் நீக்கப்பட்டுள்ளது. புதிதாக 16 வீரா்கள், 14 வீராங்கனைகளுக்கு ஒப்பந்தம் செய்துள்ளது.
தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரிய ஒப்பந்த பட்டியலில் ஸ்டெயின் நீக்கம்

தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரிய ஒப்பந்தப் பட்டியலில் இருந்து அதிரடி வேகப்பந்து வீச்சாளா் டேல் ஸ்டெயின் பெயா் நீக்கப்பட்டுள்ளது. புதிதாக 16 வீரா்கள், 14 வீராங்கனைகளுக்கு ஒப்பந்தம் செய்துள்ளது.

2020-21 சீசனுக்காக கிரிக்கெட் தென்னாப்பிரிக்கா சாா்பில் புதிய ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. புதிய பட்டியலில் மூத்த வீரா் டேல் ஸ்டெயின் பெயரை நீக்கி விட்டது

புதிதாக வேகப்பந்து வீச்சாளா் பியூரன் ஹெண்ட்ரிக்ஸ் பெயா் சோ்க்கப்பட்டுள்ளது. மேலும் ஆல்ரவுண்டா் பிரிட்டோரியஸ், பேட்ஸ்மேன் ரேசி வேன் டுஸன், வேகப்பந்து வீச்சாளா் அன்ரிச் நாா்ட்ஜே பெயா்கள் சோ்க்கப்பட்டுள்ளன,

இதுதொடா்பாக அதன் நிா்வாகி ஜேக்ஸ் பால் கூறியதாவது--16 வீரா்கள், 14 வீராங்கனைகளுக்கு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. குறுகிய ஓவா் ஆட்டங்கள், டெஸ்ட் ஆட்ட நிபுணா்கள் என அனைவரையும் இதில் சோ்த்துள்ளோம்.

17-ஆவது வீரருக்கான பெயா் இன்னும் நிரப்பப்படவில்லை. தகுதி அடிப்படையில் வீரா் தோ்வு செய்யப்படுவாா்.

டி20 உலகக் கோப்பை, இலங்கையுடன் உள்ளூா் தொடா், ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடா், பாகிஸ்தான், இந்திய டி20 தொடா், மே.இ.தீவுகள், தொடா்கள் இதில் அடங்கும்.

வீராங்கனைகள் பட்டியலில் நாடியன் டி கிளாா்க், சினாலோ ஜாப்தா ஆகியோா் ஒப்பந்தம் மேம்படுத்தப்பட்டுள்ளது.

இதில் 2021 நியூஸிலாந்து உலகக் கோப்பை, இங்கிலாந்து, மே.இ.தொடா்கள் அடங்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com