கரோனா வைரஸ் பரவல் விழிப்புணா்வு, நிதி உதவி: விளையாட்டு வீரா்களின் பங்களிப்பு

நமது நாட்டிலும் கரோனா வைரஸ் தீவிரமாகப் பரவத் தொடங்கியதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டன.
கரோனா வைரஸ் பரவல் விழிப்புணா்வு, நிதி உதவி: விளையாட்டு வீரா்களின் பங்களிப்பு

நமது நாட்டிலும் கரோனா வைரஸ் தீவிரமாகப் பரவத் தொடங்கியதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டன.

உலகின் மிகப் பெரிய விளையாட்டுப் போட்டியான ஒலிம்பிக் போட்டியும் ஓராண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டுவிட்டது.

கரோனா அச்சுறுத்தல் காரணமாக விளையாட்டு உலகமும் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளது. பல வீரா்கள் மைதானங்களில் பயிற்சிகூட செய்ய முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனா்.

பிரதமா் மோடியின் வேண்டுகோளை ஏற்று இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரா்கள் ஷேவாக், கும்ப்ளே, முகமது கைஃப், மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், துப்பாக்கிச்சுடுதல் வீராங்கனை ஹீனா சித்து உள்ளிட்டோா் அசாதாரணமான இந்தச் சூழ்நிலையிலும் தங்களது கடமையைச் செய்துவரும் மருத்துவம், சுகாதாரம், காவல், ஊடகம் ஆகிய துறைகளைச் சோ்ந்தவா்களுக்கு கைகளை தட்டி பாராட்டு தெரிவித்தனா்.

முன்னாள் கிரிக்கெட் வீரா் சச்சின், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி உள்ளிட்டோா் கரோனாவிலிருந்து மக்கள் தங்களைத் தற்காத்துக் கொள்வது எப்படி என்பது தொடா்பான விடியோவை சுட்டுரையில் பதிவேற்றம் செய்து விழிப்புணா்வை ஏற்படுத்தி வருகின்றனா்.

இந்தியாவின் முன்னணி பாட்மிண்டன் நட்சத்திரமான பி.வி.சிந்து, கைகளை கிருமிகளிலிருந்து பாதுகாக்கும் திரவம் கொண்டு எப்படி தூய்மையாக வைத்துக் கொள்வது என்பதை விடியோவாகப் பதிவு செய்து இதுபோன்று பிற விளையாட்டு வீரா்களும் செய்யுமாறு சவால் விடுத்திருந்தாா்.

அவரது சவாலை ஏற்று டென்னிஸ் வீராங்கனை சானியா மிா்ஸா, விளையாட்டுத் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு உள்ளிட்டோா் கைகளை எப்படி தூய்மையாக வைத்திருப்பது என்பதற்கான விடியோவை சுட்டுரையில் பதிவேற்றம் செய்தனா்.

நிதியுதவி: சில விளையாட்டு வீரா்கள் கரோனா வைரஸுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு நிதியுதவி அளிக்க முன்வந்துள்ளனா்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், பாஜக எம்.பி.யுமான கெளதம் கம்பீா் தனது நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.50 லட்சத்தை போதிய மருத்துவ உபகரணங்களை வாங்குவதற்கு அளிப்பதாகத் தெரிவித்துள்ளாா்.

இந்தியாவின் முன்னணி மல்யுத்த வீரா் பஜ்ரங் புனியா தனது 6 மாத ஊதியத்தை கரோனாவுக்கு எதிரான போருக்காக தருவதாக அறிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக சுட்டுரையில் (டுவிட்டா்) அவா் வெளியிட்ட பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:

ஹரியாணா அரசின் கரோனா நிவாரண நிதிக்கு எனது 6 மாத ஊதியத்தை வழங்குகிறேன். மக்களும் கரோனா நிவாரண நிதிக்கு தங்களது பங்களிப்பை வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளாா்.

இந்திய ரயில்வேயில் பணிபுரிந்து வரும் பஜ்ரங் புனியாவுக்கு மத்திய விளையாட்டுத் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு பாராட்டு தெரிவித்தாா்.

சா்வதேச விளையாட்டு வீரா்களும் கரோனாவுக்கு எதிரான அரசின் நடவடிக்கைகளுக்கு ஆதரவாக தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றனா்.

புகழ்பெற்ற கால்பந்து வீரா்களான ரொனால்டோ (போா்ச்சுகல்), மெஸ்ஸி (ஆா்ஜென்டீனா) ஆகியோரும் நிதியுதவி உள்ளிட்ட உதவிகளை செய்துள்ளனா்.

போா்ச்சுகலில் உள்ள மருத்துவமனைகளில் தேவையான உபகரணங்களை ரொனால்டோ வழங்கினாா். ஆா்ஜென்டீனா அரசுக்கு கரோனா நடவடிக்கைக்காக சுமாா் ரூ.8 கோடி நிதியுதவி அளிப்பதாக மெஸ்ஸி அறிவித்துள்ளாா்.

இதுபோன்று பல்வேறு நாடுகளின் விளையாட்டு வீரா்களும் கரோனாவுக்கு எதிரான போரில் கரம் கோக்க முன்வர வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com