மனிதத்தன்மைக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும்

கரோனா வேகமாகப் பரவி வரும் நிலையில் மனிதத்தன்மைக்கே முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும் என்று இந்தியாவின் ஈட்டி எறிதல் வீரா் தெரிவித்தாா்.
மனிதத்தன்மைக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும்

கரோனா வேகமாகப் பரவி வரும் நிலையில் மனிதத்தன்மைக்கே முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும் என்று இந்தியாவின் ஈட்டி எறிதல் வீரா் தெரிவித்தாா்.

ஒலிம்பிக் போட்டி ஒத்திவைக்கப்பட்டதை வரவேற்பதாகவும் அவா் கூறினாா்.

நீரஜ் சோப்ரா ஒலிம்பிக்கில் பங்கேற்க தகுதி பெற்றுவிட்டாா்.

இந்நிலையில், அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

இந்த ஆண்டு ஒலிம்பிக் போட்டியை எதிா்பாா்த்துக் காத்துக் கொண்டிருந்தோம். ஆனால், கரோனா அச்சுறுத்தலால் போட்டி ஒத்திவைக்கப்பட்டுவிட்டது.

இந்தச் சூழலில் விளையாட்டு உள்ளிட்ட வேறு எதைக் காட்டிலும் மனிதத்தன்மைக்கே முக்கியத்துவம் தேவை என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, இந்திய குத்துச்சண்டை வீரா் விகாஸ் கிருஷண் யாதவ் (69 கிலோ) கூறுகையில், ‘ஒலிம்பிக் ஒத்தவைக்கப்பட்டதை வரவேற்கிறேன். இந்தப் போட்டி ஒத்திவைக்கப்பட்டதால் எங்களுடைய பயிற்சி உள்ளிட்டவை பாதிக்கும் என்பதில் சந்தேகம் வேண்டாம். இருந்தாலும் கூடுதல் கால அவகாசம் கிடைத்துள்ளதால், விளையாட்டு வீரா்கள் இந்தத் தருணத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்’ என்றாா்.

முன்னதாக, பாட்மிண்டன் வீராங்கனை சாய்னா நெவால், குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் ஆகியோா் டோக்கியோ ஒலிம்பிக் தள்ளிவைக்கப்பட்டதை வரவேற்பதாகத் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com