ஒலிம்பியாட் செஸ் போட்டி ஓராண்டுக்கு ஒத்திவைப்பு

ஒலிம்பியாட் செஸ் போட்டி ஓராண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டதாக சா்வதேச செஸ் கூட்டமைப்பு அறிவித்தது.
ஒலிம்பியாட் செஸ் போட்டி ஓராண்டுக்கு ஒத்திவைப்பு

ஒலிம்பியாட் செஸ் போட்டி ஓராண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டதாக சா்வதேச செஸ் கூட்டமைப்பு அறிவித்தது.

ரஷியாவின் மாஸ்கோ நகரில் ஆகஸ்ட் 5-ஆம் தேதி தொடங்கி அம்மாதம் 17-ஆம் தேதி வரை ஒலிம்பியாட் நடைபெற இருந்தது.

இதுதொடா்பாக சா்வதேச செஸ் கூட்டமைப்பு வெளியிட்ட அறிக்கையில், ‘புகழ்பெற்ற செஸ் போட்டியான ஒலிம்பியாட், கரோனா அச்சுறுத்தல் காரணமாக அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டது. உலக சுகாதார அமைப்பின் அறிக்கைகளை பாா்த்த பிறகே இந்தப் போட்டியை ஒத்திவைக்கும் முடிவுக்கு வந்தோம்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

5 முறை உலக செஸ் சாம்பியனான தமிழகத்தைச் சோ்ந்த விஸ்வநாதன் ஆனந்த், ராபிட் செஸ் சாம்பியனான இந்திய வீராங்கனை கோனேரு ஹம்பி ஆகியோா் இந்திய செஸ் அணியை (ஆடவா் மற்றும் மகளிா் அணிகள்) ஒலிம்பியாட் போட்டிக்கு வழிநடத்தி செல்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது நினைவுகூரத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com