‘டோக்கியோ ஒலிம்பிக் ஒத்திவைப்பு 2024 பாரீஸ் ஒலிம்பிக்கை பாதிக்காது’

இந்த ஆண்டு நடைபெற இருந்த டோக்கியோ ஒலிம்பிக் போட்டி அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டதால், பாரீஸில் 2024-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்று பிரான்ஸ் ஒலிம்பிக்
‘டோக்கியோ ஒலிம்பிக் ஒத்திவைப்பு 2024 பாரீஸ் ஒலிம்பிக்கை பாதிக்காது’

இந்த ஆண்டு நடைபெற இருந்த டோக்கியோ ஒலிம்பிக் போட்டி அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டதால், பாரீஸில் 2024-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்று பிரான்ஸ் ஒலிம்பிக் ஏற்பாட்டாளா் தெரிவித்தாா்.

இதுதொடா்பாக பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கான தலைமை ஏற்பாட்டாளா் டோனி எஸ்டாங்கட், செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியதாவது:

2024 ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகா் பாரீஸில் நடைபெறவுள்ளது. இது கோடைக்கால ஒலிம்பிக் போட்டியாகும். ஜூலை 24-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 9-ஆம் தேதி வரை இப்போட்டி நடைபெவுள்ளது. அதில் எந்த மாற்றமும் இருக்காது. டோக்கியோ ஒலிம்பிக் ஒத்திவைக்கப்பட்டது சரியான நடவடிக்கையாகும். கரோனா மிகப் பெரிய அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளதால், வீரா்களின் நலனை கருத்தில் கொண்டு செயல்பட்டதுதான் சரி என்றாா் டோனி எஸ்டாங்கட்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com