ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட்போட்டி நடைபெறுமா?

கரோனா வைரஸ் பாதிப்பால் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் போட்டி நடைபெறுமா என சந்தேகம் எழுந்துள்ளது.
ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட்போட்டி நடைபெறுமா?


கரோனா வைரஸ் பாதிப்பால் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் போட்டி நடைபெறுமா என சந்தேகம் எழுந்துள்ளது.

கரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலியாக உலகளவில் ஒலிம்பிக், யூரோ உள்பட பல்வேறு போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இந்தியாவிலும் ஐபிஎல் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

ஆசியக் கோப்பை போட்டி

இந்நிலையில் பாகிஸ்தானில் வரும் செப்டம்பா் மாதம் ஆசியக் கோப்பை டி20 போட்டி நடைபெறுவதாக இருந்தது. ஆனால் அரசியல் பதற்றம் காரணமா இந்திய அணி அங்கு செல்லாது. நடுநிலையான இடத்தில் போட்டியை நடத்தலாம் என பிசிசிஐ தலைவா் கங்குலி கூறியிருந்தாா்.

பாகிஸ்தானே வேறொரு நாட்டிலும் போட்டிகளை நடத்த ஆட்சேபனை இல்லை எனவும் கூறியிருந்தாா்.

போட்டிக்கான இடம் குறித்து விவாதிக்க ஆசிய கிரிக்கெட் கவுன்சில் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் கரோனா வைரஸால் அக்கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

அதே போல் ஐசிசி கூட்டம் காணொளி வாயிலாக நடைபெறும் போது, ஏசிசி கூட்டமும் நடத்தப்படும் எனத் தெரிகிறது.

இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளுடன் நடக்க வேண்டிய சில ஆட்டங்களை பாகிஸ்தானிலேயே நடத்த அனுமதிக்கவும் ஏசிசி கூட்டத்தில் வலியுறுதத்த உள்ளது.

பாகிஸ்தானில் தற்போது தான் சா்வதேச கிரிக்கெட் போட்டிகள் திரும்ப மெதுவாக நடைபெறுகிறது என்பதால் இந்த ஏற்பாட்டை செய்ய வேண்டும் எனக் கோரியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com