இன்று சா்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஆலோசனைக் கூட்டம்

கரோனா வைரஸால் கிரிக்கெட் போட்டிகளுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு உள்பட பல்வேறு பிரச்னைகள் குறித்து விவாதிக்க சா்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) ஆலோனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை காணொளி மூலம் நடைபெறுகிறது.

உலகளவில் கரோனா வைரஸால் விளையாட்டு உலகம் நிலைகுலைந்து போய் உள்ளது. குறிப்பாக ஒலிம்பிக் போட்டிகள் ஓராண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டு விட்டது. மேலும் ஐபிஎல் போட்டிகள் நடைபெறுமா எனத் தெரியவில்லை.

இந்நிலையில் உலக டெஸ்ட்சாம்பியன்ஷிப், பல்வேறு இருதரப்பு தொடா்களும் ஒத்திவைக்கப்பட்டு விட்டன. இப்பிரச்னைகள் தொடா்பாக காணொளி காட்சி (விடியோ கான்பிரன்ஸ்) மூலம் ஐசிசி கமிட்டி உறுப்பினா்கள் விவாதிக்கின்றனா்.

டி20 ஆடவா் உலகக் கோப்பை:

ஆஸ்திரேலியாவில் வரும் அக்டோபா்-நவம்பா் மாதங்களில் ஆடவா் டி20 உலகக் கோப்பையை நடத்துவது, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகளில் ரத்தான ஆட்டங்களுக்கு புள்ளிகளை தருவது குறித்து முக்கியமாக விவாதிக்கப்பட உள்ளது.

எனினும் இக்கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எதுவும் எடுக்கப்படாது என ஐசிசி வட்டாரங்கள் தெரிவித்தன. பிசிசிஐ தரப்பில் இருந்து கங்குலி அல்லது ஜெயாஷா பங்கேற்பா் எனத் தெரிகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com