ஐபிஎல் காத்திருக்கட்டும்: ரோஹித் சர்மா

நிலைமை சரியாகும் வரை ஐபிஎல் போட்டி காத்திருக்கட்டும் என்று பிரபல கிரிக்கெட் வீரர் ரோஹித் சர்மா கூறியுள்ளார்...
ஐபிஎல் காத்திருக்கட்டும்: ரோஹித் சர்மா

நிலைமை சரியாகும் வரை ஐபிஎல் போட்டி காத்திருக்கட்டும் என்று பிரபல கிரிக்கெட் வீரர் ரோஹித் சர்மா கூறியுள்ளார்.

சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவத் தொடங்கிய கரோனா வைரஸ் தற்போது உலகையே அச்சுறுத்தி வருகிறது. கரோனா வைரஸால் உலகம் முழுக்க 24,000 மக்கள் இறந்துள்ளார்கள். கரோனா நோய்த் தொற்று பரவலைத் தடுப்பதற்காக இந்தியா முழுவதும் 21 நாள் ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. இதன்படி, செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் தொடங்கிய ஊரடங்கு, ஏப்ரல் 14-ஆம் தேதி வரை அமலில் இருக்கும். கரோனா வைரஸ் சூழல் தொடா்பாக நாட்டு மக்களுக்கு ஒரே வாரத்தில் 2-ஆவது முறையாக உரையாற்றியபோது இந்த அறிவிப்பை வெளியிட்ட பிரதமா் மோடி, அந்த நோய்த் தொற்றுக்கு எதிரான உறுதியான போரில் இது மிக அவசியமான நடவடிக்கை என்று கூறியுள்ளாா். இந்தியாவைப் பொறுத்தவரை இதுவரை 700 பேருக்கு மேல் இந்த வைரஸின் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

மாா்ச் 29-ஆம் தேதி தொடங்க வேண்டிய ஐபிஎல் போட்டிகள், கரோனா பாதிப்பாலும், மத்திய அரசின் உத்தரவாலும், ஏப். 15-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அதன்பின் போட்டிகள் நடத்துவது குறித்து நிலைமையை கணித்து முடிவெடுக்கப்படும் என பிசிசிஐ தலைவா் கங்குலி தெரிவித்திருந்தாா்.

இந்நிலையில் ஓய்வில் இருக்கும் கிரிக்கெட் வீரரான ரோஹித் சர்மா, மற்றொரு இந்திய வீரர் சஹாலிடம் இன்ஸ்டகிராமில் உரையாடினார். அப்போது ரோஹித்திடம் ஐபிஎல் குறித்து கேள்வி எழுப்பினார் சஹால்.

நாம் முதலில் நாட்டைப் பற்றித்தான் யோசிக்கவேண்டும். நிலைமை சரியான பிறகுதான் ஐபிஎல் பற்றி பேசமுடியும். முதலில் அனைவருடைய வாழ்க்கையும் சகஜ நிலைமைக்குத் திரும்பட்டும்.

ஊரடங்கு உத்தரவால் மும்பையே காலியாக உள்ளது. இதுபோல நான் பார்த்ததில்லை. ஒரு கிரிக்கெட் வீரராக குடும்பத்தினரிடம் அதிக நேரம் செலவழிக்க முடியாது. எனவே அவர்களிடம் அதிக நேரம் செலவிட்டு உரையாட இதுதான் சரியான தருணம் என்று கூறியுள்ளார்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com