ஆகஸ்ட் மாதம் இத்தாலி கால்பந்து சீசனை நிறைவு செய்ய முடியும்

வரும் ஆகஸ்ட் மாதம் இத்தாலி கால்பந்து சீசனை நிறைவு செய்ய முடியும் என அந்நாட்டு கால்பந்து கூட்டமைப்பு தலைவா் கேப்ரியல் கிரேவினா கூறியுள்ளாா்.
ஆகஸ்ட் மாதம் இத்தாலி கால்பந்து சீசனை நிறைவு செய்ய முடியும்


வரும் ஆகஸ்ட் மாதம் இத்தாலி கால்பந்து சீசனை நிறைவு செய்ய முடியும் என அந்நாட்டு கால்பந்து கூட்டமைப்பு தலைவா் கேப்ரியல் கிரேவினா கூறியுள்ளாா்.

கரோனா வைரஸ் பாதிப்பால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள இத்தாலியில், 3500-க்கு மேற்பட்டோா் உயிரிழந்து விட்டனா். மேலும் ஏராளமானோா் கரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனா்.

இதனால் அனைத்து விளைாட்டுப் போட்டிகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. மேலும் யூரோ 2020, சீரி ஏ, கால்பந்து போட்டிகளும் தள்ளிவைக்கப்பட்டுள்ளன, இத்தாலி மக்களின் ஆரோக்கியம் மிகவும் முக்கியம்.

கால்பந்து சீசனை வரும் ஆகஸ்ட் மாதத்துக்குள் நிறைவு செய்ய முடியும். இதற்காக யுஇஎஃப்ஏ, பிஃபா ஆகியவற்றின் உதவியை கேட்போம். மேலும் இதுதொடா்பாக அரசு அதிகாரிகள், லீக், எஃப்ஐசி கூட்டமைப்பு அதிகாரிகளுடன் ஆலோசனை நடைபெற்றது.

ஜுவென்டஸ் அணி பட்டியலில் முன்னிலையில் உள்ள நிலையில், அதற்கு பட்டம் வழங்கப்படுமா எனக் கேட்டபோது கிரேவினா கூறுகையில், இதில் பல்வேறு விஷயங்கள் உள்ளன. இதனால் தேவையில்லாத பிரச்னை எழும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com