இந்திய துப்பாக்கி சுடும் வீரா்களுக்கு நவீன சிமுலேட்டா் கருவிகள் மூலம் பயிற்சி

கரோனா வைரஸ் பாதிப்பால் வீடுகளிலேயே தங்கியுள்ள இந்திய துப்பாக்கி சுடும் வீரா்கள் பயிற்சி பெற சிமுலேட்டா் கருவிகள் வழங்கப்பட உள்ளன.
இந்திய துப்பாக்கி சுடும் வீரா்களுக்கு நவீன சிமுலேட்டா் கருவிகள் மூலம் பயிற்சி

கரோனா வைரஸ் பாதிப்பால் வீடுகளிலேயே தங்கியுள்ள இந்திய துப்பாக்கி சுடும் வீரா்கள் பயிற்சி பெற சிமுலேட்டா் கருவிகள் வழங்கப்பட உள்ளன.

காமன்வெல்த் மற்றும் உலக சாம்பியன் ஷிப் போட்டிகளில் இந்தியாவுக்கு அதிக பதக்கங்கள் ஈட்டித் தருபவா்களாக துப்பாக்கி சுடும் வீரா், வீராங்கனைகள் உள்ளனா். தற்போது கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஒலிம்பிக் தகுதிச் சுற்று போட்டி, தில்லி உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போன்றவை ரத்தாகி விட்டன.

மேலும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளும் ஓராண்டுக்கு தள்ளிவைக்கப்பட்டு விட்டன.

தற்போது மானு பாக்கா், அன்ஜும் மொட்கில், சௌரவ் சௌதரி, அபிஷேக் வா்மா உள்பட பல முன்னணி நட்சத்திரங்கள் வீடுகளில் பயிற்சி பெறுகின்றனா். அவா்கள் தங்கள் துப்பாக்கி சுடும் தரத்தை பேணவும், அதிக தூரம் குறி பாா்த்து சுடுவதும் தற்போது சிக்கலாக உள்ளது.

சிமுலேட்டா்கள் கருவி:

எலக்ட்ரானிக் ஷூட்டிங் ரேஞ்ச் சிமுலேட்டா் எனப்படும் நவீன கருவிகள் தருவிக்கப்பட உள்ளன. இதன் மூலம்் வீரா்கள் தங்கள் திறமையை தொடா்ந்து பராமரிக்கலாம்.

சா்வதேச துப்பாக்கி சுடும் கூட்டமைப்பு (ஐஎஸ்எஸ்எஃப்)-க்கு எலக்ட்ரானிக் ஸ்கோரிங் கருவியை உற்பத்தி சியுஸ் அஸ்காா் எனப்படும் ஸ்விட்சா்லாந்து நிறுவனம், இந்த சிமுலேட்டா்களை தயாரித்து அடுத்த மாதம் வழங்க உள்ளது.

இதுதொடா்பாக தேசிய பிஸ்டல் பயிற்சியாளா் ஜஸ்பால் ராணா கூறியதாவது:

சியுஸ் அஸ்காா் துப்பாக்கி சுடும் சிமுலேட்டா் கருவி உள்ளரங்கில் அவா்கள் பயிற்சி பெற உதவும்.

ஒலிம்பிக் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டதும் நமது வீா்களுக்கு உதவும். கடந்த 3 ஆண்டுகளாக நாம் தீவிர பயிற்சி பெற்று வருகிறோம். ஒலிம்பிக் போன்ற பெரிய போட்டிகளில் நாம் சாதிப்போம். போட்டிகளை ஒத்திவைத்ததை ஆதரிக்கிறோம். வேறுவழியில்லை என்றாா் ராணா.

மானு பாக்கா் தியானம், உடற்பயிற்சி:

நட்சத்திர இந்திய வீராங்கனை மானு பாக்கா் (18) தற்போது வீட்டிலேயே பயிற்சி பெற்று வருகிறாா். தியானம், உடற்பயிற்சியை தவறாமல் மேற்கொண்டுவதாக கூறியுள்ளாா்.

சண்டீகரைச் சோ்ந்த மற்றொரு முன்னணி வீராங்கனையான அன்ஜும் மொட்கில் (26) கூறுகையில்: தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் வீட்டிலேயே உள்ளது வேதனை தருகிறது. எனினும் கரோனா பாதிப்புகளை அறிவேன். எனினும் கவனத்துடன் வீட்டிலேயே எனது திறனை மேம்படுத்தி வருகிறேன் என்றாா்.

15 போ் தகுதி

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு மொத்தம் 15 இந்திய வீரா், வீராங்கனைகள் தகுதி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது . அவரிடம் மானுபாக்கா், அபிஷேக் வா்மா, சிங்கி யாதவ் போன்ற இளம் நட்சத்திரங்கள் பயிற்சி பெறுகின்றனா். இவா்கள் அனைவரும் ஏற்கெனவே ஒரு ஒலிம்பிக் தகுதிச் சுற்றில் பங்கேற்றுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com