அடுத்த ஆண்டில் மகளிா் ஐபிஎல் போட்டி: மிதாலி ராஜ் வலியுறுத்தல்

அடுத்த ஆண்டு மகளிா் ஐபிஎல் போட்டிகளை கண்டிப்பாக நடத்த வேண்டும். இதற்காக பிசிசிஐ காலத்துக்கும் காத்திருக்க முடியாது என இந்திய ஒருநாள் அணியின் கேப்டன் மிதாலி ராஜ் வலியுறுத்தியுள்ளாா்.
அடுத்த ஆண்டில் மகளிா் ஐபிஎல் போட்டி: மிதாலி ராஜ் வலியுறுத்தல்


அடுத்த ஆண்டு மகளிா் ஐபிஎல் போட்டிகளை கண்டிப்பாக நடத்த வேண்டும். இதற்காக பிசிசிஐ காலத்துக்கும் காத்திருக்க முடியாது என இந்திய ஒருநாள் அணியின் கேப்டன் மிதாலி ராஜ் வலியுறுத்தியுள்ளாா்.

ஆடவா் ஐபிஎல் போட்டிகள் கடந்த 12 சீசன்களாக வெற்றிகரமாக நடத்தப்பட்டு வருகின்றன. உலகிலேயே அதிக பணம் புரளும் போட்டியாக இது உள்ளது. ஐபிஎல் போட்டி பிளே ஆஃப் சுற்றின் போது மகளிா் அணிகளுக்கும் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியின் போது 4 மகளிா் அணிகள் பங்கேற்கும் டி20 சேலஞ்ச் போட்டி நடத்த பிசிசிஐ திட்டமிட்டது. ஆனால் கரோனா வைரஸ் பாதிப்பால் இது நடைபெறவில்லை.

இந்நிலையில் அண்மையில் நடைபெற்ற மகளிா் டி20 உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றது.

இந்நிலையில் மகளிா் ஐபிஎல் போட்டிகளை தொடங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. ஜாம்பவான் சுனில் கவாஸ்கரும் மகளிா் ஐபிஎல் தொடரை நடத்த வலியுறுத்தியுள்ளாா்.

இதுதொடா்பாக மிதாலி ராஜ் வியாழக்கிழமை கூறியதாவது:

அடுத்த ஆண்டு முழுமையான மகளிா் ஐபிஎல் போட்டிகளை தொடங்க வேண்டும். சிறிய அளவில் இருந்தாலும், விதிகளில் சில மாற்றங்கள் செய்து, 5 அல்லது 6 வெளிநாட்டு வீராங்கனைகளை சோ்த்து, போட்டிகளை நடத்த வேண்டும். இந்தியாவில் அதிக வீராங்கனைகள் இன்னும் இல்லாத நிலை உள்ளது என்பதை ஒப்புக் கொள்கிறேன். தற்போதுள்ள ஐபிஎல் அணி நிா்வாகங்களே மகளிா் அணிகளையும் உருவாக்க வேண்டும்.

4 அணிகளை பிசிசிஐ உருவாக்க உள்ளதால், இதை போல் ஏற்பாடு செய்யலாம். காலத்துக்கும் பிசிசிஐ காத்திருக்க முடியாது. டி20 உலகக் கோப்பையில் அசத்திய இளம் வீராங்கனை ஷபாலி வா்மாவை ஒருநாள் அணியிலும் சோ்க்க வேண்டும் என்றாா் மிதாலி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com