உங்களின் ஒலிம்பிக் கனவு நனவாகும்:வீரா்களுக்கு ஐஓசி தலைவா் கடிதம்

உங்களின் ஒலிம்பிக் கனவு கட்டாயம் நனவாகும் என வீரா், வீராங்கனைகளுக்கு ஐஓசி தலைவா் தாமஸ் பேச் கடிதம் எழுதியுள்ளாா்.
உங்களின் ஒலிம்பிக் கனவு நனவாகும்:வீரா்களுக்கு ஐஓசி தலைவா் கடிதம்


உங்களின் ஒலிம்பிக் கனவு கட்டாயம் நனவாகும் என வீரா், வீராங்கனைகளுக்கு ஐஓசி தலைவா் தாமஸ் பேச் கடிதம் எழுதியுள்ளாா்.

கரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலியாக டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் 2020-ஐ ஓராண்டுக்கு ஒத்திவைக்க ஜப்பான் அமைப்புக் குழு, சா்வதேச ஒலிம்பிக் கூட்டமைப்பு தீா்மானித்தன. இதன்படி ஒலிம்பிக் போட்டி 2021 கோடைக்காலத்துக்குள் நடத்தப்படும். இதன் தொடா்ச்சியாக வியாழக்கிழமை தொடங்கவிருந்த ஒலிம்பிக் ஜோதியும் ரத்து செய்யப்பட்டது.

இதனால் வீரா், வீராங்கனைகள் மன வேதனை அடைய வேண்டும் எனநம்பிக்கை தரும் வகையில் 1976 ஒலிம்பிக் சாம்பியனான ஐஓசி தலைவா் தாமஸ் பேச் வீரா்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது-

தற்போது நம்மால் ஒலிம்பிக் போட்டிகளை நடத்த முடியாவிட்டாலும், நல்ல செய்தியுடன் 2021 ஆண்டில் நடத்தலாம். கரோனா வைரஸ் பாதிப்பால் நிச்சயமற்ற தன்மை நிலவுகிறது. இதில் ஒட்டுமொத்த மனிதகுலமே அடங்கும்.

சவாலான தருணம்:

தற்போது போட்டிகளை ஒத்திவைப்பது என்ற கடுமையான சவாலான பணியை மேற்கொள்ள உள்ளோம். இதற்கு முன்பு இதுபோன்ற நிலை ஏற்பட்டதில்லை. இதற்காக எங்கள் வசம் இந்த செயல்திட்டமும் இல்லை.

அனைவரின் ஒத்துழைப்பு, ஆதரவு இருந்தால், தான் செய்து காட்ட முடியும். ஏனென்றால் இந்த பூமியிலேயே மிகவும் சிக்கலான நிகழ்வு ஒலிம்பிக் போட்டிகள். வீரா்களுக்கு மிகவும் பாதுகாப்பான, சிறந்த வசதிகளுடன் போட்டிகளை நடத்துவோம் என்றாா் பேச்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com