உலகக் கோப்பையில் விளையாடுவதற்காக தென் ஆப்பிரிக்க அணியிலிருந்து விலகிய வீரர்!

தென் ஆப்பிரிக்க அணியின் சுழற்பந்துவீச்சாளர் டேன் பீட், உலகக் கோப்பையில் விளையாடுவதற்காக அமெரிக்க அணியில் இணைந்துள்ளார்.
உலகக் கோப்பையில் விளையாடுவதற்காக தென் ஆப்பிரிக்க அணியிலிருந்து விலகிய வீரர்!

தென் ஆப்பிரிக்க அணியின் சுழற்பந்துவீச்சாளர் டேன் பீட், உலகக் கோப்பையில் விளையாடுவதற்காக அமெரிக்க அணியில் இணையவுள்ளார்.

இதனால் 9 சர்வதேச ஆட்டங்களில் விளையாடியுள்ள டேன் பீட், தென் ஆப்பிரிக்க அணியிலிருந்து விலகியுள்ளார். கடந்த வருடம் அமெரிக்க அணி ஒருநாள் கிரிக்கெட்டில் விளையாடும் தகுதியை அடைந்தது. இதனால் அமெரிக்காவுக்கு இடம்பெயர்ந்து அமெரிக்க அணியில் இடம்பெற்று உலகக் கோப்பையில் விளையாட அவர் திட்டமிட்டுள்ளார்.

தென் ஆப்பிரிக்க அணியில் வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் ஷம்ஸியும் டெஸ்டில் மஹாராஜும் சிறப்பாக விளையாடி வருவதால் டேன் பீடுக்கான வாய்ப்புகள் குறைவாக உள்ளன. இதனால் இந்த முடிவை டேன் பீட் எடுத்துள்ளார். அமெரிக்காவில் நடைபெறும் மைனர் லீக் டி20 போட்டியில் விளையாடுவதன் மூலம் அமெரிக்க அணியில் இடம்பெற முடியும் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

பீட், இதுவரை அமெரிக்காவுக்குச் சென்றதில்லை. நியூ யார்க், சிகாகோ, லாஸ் ஏஞ்சல்ஸ், சியாட்டல் ஆகிய நகரங்களில் ஏதாவதொன்றில் வாழ முடிவெடுத்துள்ளதாகக் கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com