தோனியின் இந்தியக் கனவு முடிந்துவிட்டது: ஹர்ஷா போக்ளே கணிப்பு

எம்.எஸ். தோனியால் இந்திய அணியில் மீண்டும் இடம்பிடிக்க முடியுமா? இதுதான் இந்திய ரசிகர்கள் மனத்தில் உள்ள கேள்வி.
தோனியின் இந்தியக் கனவு முடிந்துவிட்டது: ஹர்ஷா போக்ளே கணிப்பு

எம்.எஸ். தோனியால் இந்திய அணியில் மீண்டும் இடம்பிடிக்க முடியுமா? இதுதான் இந்திய ரசிகர்கள் மனத்தில் உள்ள கேள்வி.

வாய்ப்பில்லை என்கிறார் ஹர்ஷா போக்ளே.

கடந்த 2019 உலகக் கோப்பை அரையிறுதியில் தோல்விக்குப் பின் தோனி எந்த போட்டியிலும் பங்கேற்கவில்லை.

கரோனா பாதிப்பால், 2020 ஐபிஎல் போட்டி, ஏப்ரல் 15-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுவிட்டது.

2020 ஐபிஎல் போட்டி, கரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த வருடம் நடக்காமல் போனால் தோனியின் நிலைமை என்ன ஆகும் என்பதற்குப் பலரும் பலவிதமான கணிப்புகளை அளித்து வருகிறார்கள். பிரபல வர்ணனையாளர் ஹர்ஷா போக்ளே இதுபற்றி கூறியதாவது:

தோனியின் இந்தியக் கனவுகள் முடிந்துவிட்டதாக நினைக்கிறேன். டி20 உலகக் கோப்பை நடக்கும் செப்டம்பர் - அக்டோபரை தோனி குறிவைக்கவில்லை என நினைக்கிறேன். ஒருவேளை அவருக்கு ஐபிஎல் பிரமாதமாக அமைந்திருந்தால் அதற்கு வாய்ப்பிருந்திருக்கும். ஆனால் அந்த நிலைமை தற்போது கடந்துவிட்டது என நினைக்கிறேன் என்று கூறியுள்ளார்.

மூத்த வீரரான தோனி கடந்த 2019 ஒருநாள் உலகக் கோப்பை போட்டி அரையிறுதியில் இருந்து எந்த ஆட்டத்திலும் பங்கேற்கவில்லை. டெஸ்ட்டில் இருந்து ஏற்கெனவே ஓய்வு பெற்றுவிட்ட அவா், ஒருநாள், டி20 ஆட்டங்களில் இருந்தும் ஓய்வு பெற்றுவிடுவாரா என ரசிகர்கள் கவலையில் உள்ளார்கள். வரும் ஐபிஎல் தொடரில் தோனி சிறப்பாக ஆடினால், டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பெற வாய்ப்புள்ளது என பயிற்சியாளா் சாஸ்திரி கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com