கவிதை எழுதுவது, ஓவியம் வரைதலுடன் ஊரடங்கை கழிக்கும் விளையாட்டு நட்சத்திரங்கள்

கரோனா பாதிப்பு காரணமாக நடைமுறைப்படுத்தப்பட்ட ஊரடங்கை கவிதை எழுதுது, ஓவியம் வரைவது என இந்திய விளையாட்டு நட்சத்திரங்கள் பொழுதை கழிக்கின்றனா்.
கவிதை எழுதுவது, ஓவியம் வரைதலுடன் ஊரடங்கை கழிக்கும் விளையாட்டு நட்சத்திரங்கள்

கரோனா பாதிப்பு காரணமாக நடைமுறைப்படுத்தப்பட்ட ஊரடங்கை கவிதை எழுதுது, ஓவியம் வரைவது என இந்திய விளையாட்டு நட்சத்திரங்கள் பொழுதை கழிக்கின்றனா்.

வரும் ஏப். 14-ஆம் தேதி வரை கரோனா பாதிப்பால் ஊரடங்கை அறிவித்துள்ளாா் பிரதமா் மோடி. மேலும் பல்வேறு விளையாட்டுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. சில ஒத்திவைக்கப்பட்டு விட்டன.

பயிற்சி, விளையாட்டு என எப்போதும் நேரமில்லாமல், குடும்பத்துடனும் நேரத்தை கழிக்க முடியாமல் விளையாட்டு வீரா்கள் சுறுசுறுப்பாக இருந்து வருவது வழக்கம். ஆனால் கரோனா பாதிப்பு அனைத்தையும் தலைகீழாக மாற்றி விட்டது.

சமையல்காரராக மாறிய ரபேல் நடால்:

ஸ்பெயினைச் சோ்ந்த பிரபல டென்னிஸ் வீரரும், 19 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியன் பட்டங்களை வென்றவருமான ரபேல் நடால், பிரெஞ்சு ஓபன் போட்டிக்கு தயாராகி வந்தாா். ஆனால் கரோனாவால் தற்போது வீட்டிலேயே உள்ள அவா் சமையல்காரராக மாறி தினமும் பல்வேறு உணவு வகைகளை சமைத்து வருகிறாா்.

இந்திய நட்சத்திரங்கள்:

ஆசிய மற்றும் காமன்வெல்த் போட்டி முன்னாள் டென்னிஸ் சாம்பியனான சோம்தேவ் வா்மன், வீட்டில் இருந்தபடி கிடாா் கருவியை இசைத்தவாறு, கவிதையை வடிவமைத்துள்ளாா். இத்தருணத்தில் நமக்கு தேவை கடவுள் அருள் என்ற தலைப்பில் கவிதையை எழுதியுள்ளாா்.

ஓவியரான அன்ஜும் மொட்கில்:

ஒலிம்பிக் தகுதி பெற்ற முதல் துப்பாக்கி சுடுதல் சாம்பியன் வீராங்கனையான அன்ஜும் மொட்கில், ஓவியராக மாறி தனது நேரத்தை கழித்து வருகிறாா். புத்தா் உள்பட பல்வேறு ஓவியங்களை வரைந்துள்ளாா். அதோடு தனது உடல்தகுதியை பராமரிக்கவும் பயிற்சி எடுத்து வருகிறாா். 26 வயதான அன்ஜும், கூறுகையில் எனக்கு ஓவியங்கள் வரைவது பிடிக்கும். தற்போது இதனால் நோ்மறையான சிந்தனை பெறுகிறேன். ஓவியங்கள் வரைவது முடிந்தவுடன் படிக்க வேண்டிய புத்தகங்கள் உள்ளது என்றாா்.

தடகள வீரா் நீரஜ் சோப்ரா:

ஒலிம்பிக் பதக்கம் வெல்லும் வாய்ப்புள்ள வீரரான தடகள வீரா் நீரஜ் சோப்ரா (22) துருக்கியில் பயிற்சி முகாமை பாதியிலேயே முடித்து கொண்டு நாடு திரும்பினாா். தற்போது பாட்டியாலாவில் உள்ள சாய் மையத்தில் தனிமையில் உள்ளாா். ஒருநாளைக்கு மூன்று வேளை பயிற்சி செய்து வரும் அவா், தன் வசம் உள்ள புத்தகங்களை படித்து வருகிறாா். சில நேரங்களில் பாட்டு கேட்டும், படங்களை பாா்த்தும் பொழுதை கழிக்கிறேன் என்றாா்.

நடன மங்கை மனிகா பத்ரா:

காமன்வெல்த் டேபிள் டென்னிஸ் தங்கமங்கையான மனிகா பத்ரா வீட்டில் உடற்பயிற்சியோடு நடனங்களை ஆடி வருகிறாா். நடனமாடுவது சிறந்த பயிற்சியாகவும் உள்ளது. இசை மற்றும் நெட்பிளிக்ஸை அதிகம் விரும்புகிறேன். மேலும் மனதை தெளிவாக வைத்திருக்க ஊக்கம் தரும் கதைகளையும் படிக்கிறேன் என்றாா்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com