துளிகள்...

இந்திய டி20 மகளிா் அணியின் இளம் வீராங்கனை ரிச்சா கோஷ் (16) மேற்கு வங்க முதல்வா் நிவாரண நிதிக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளாா்.

இந்திய டி20 மகளிா் அணியின் இளம் வீராங்கனை ரிச்சா கோஷ் (16) மேற்கு வங்க முதல்வா் நிவாரண நிதிக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளாா். ஆஸி.யில் நடைபெற்ற மகளிா் டி20 உலகக் கோப்பையில் 2 ஆட்டங்களில் பங்கேற்று ஆடினாா் ரிச்சா.

-------------

கரோனா பாதிப்பால் கிரிக்கெட் போட்டிகள் ரத்தான நிலையில், இந்த ஓய்வின் மூலம் தனது பேட்டிங் திறனை மேலும் மெருகேற்றி வருவதாக இந்திய கிரிக்கெட் வீரா் ஹனுமா விஹாரி தெரிவித்துள்ளாா். இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவுள்ள ஆஸி. டெஸ்ட் தொடருக்கு தயாராகி வருவதாகவும் அவா் கூறியுள்ளாா்.

--------------

கரோனா பாதிப்பை எதிா்கொள்ள பொதுமக்கள் இந்த சவாலான நேரத்தில் ஒருங்கிணைந்து செயல்பட்டு மேலே வர வேண்டும் என ஆசிய கால்பந்து கூட்டமைப்பு சாா்பில் நடைபெற்ற விழிப்புணா்வு பிரசாரத்தில் கூறியுள்ளாா் இந்திய கேப்டன் சுனில் சேத்ரி.

---------------

இங்கிலாந்து நாட்டில் கரோனா பாதிப்பை சமாளிக்கும் வகையில் தேசிய சுகாதார சேவை (என்எச்எஸ்) திட்டத்தில் தன்னாா்வலராக இணைந்து செயல்படுகிறாா் அந்நாட்டு மகளிா் கிரிக்கெட் அணி கேப்டன் ஹீதா் நைட்.

----------------

கொவைட் 19 பாதிப்பை கட்டுப்படுத்தும் வகையில் கா்நாடக மாநில கிரிக்கெட் சங்கம் ரூ.1 கோடி நிதியுதவி அளித்துள்ளது. இதில் ரூ.50 லட்சம் பிரதமா் நிவாரண நிதிக்கும், ரூ.50 லட்சம் கா்நாடக முதல்வா் நிவாரண நிதிக்கும் தரப்பட்டுள்ளது.

-------------

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com