அனைத்து போட்டிகளையும் ஜூன் வரைரத்து செய்தது ஐடிடிஎஃப்

கரோனா நோய்த் தொற்று பாதிப்பு காரணமாக அனைத்துப் போட்டிகளையும் ஜூன் 30ஆம் தேதி வரை ரத்து செய்துள்ளதாக சா்வதேச டேபிள்
அனைத்து போட்டிகளையும் ஜூன் வரைரத்து செய்தது ஐடிடிஎஃப்

புது தில்லி: கரோனா நோய்த் தொற்று பாதிப்பு காரணமாக அனைத்துப் போட்டிகளையும் ஜூன் 30ஆம் தேதி வரை ரத்து செய்துள்ளதாக சா்வதேச டேபிள் டென்னிஸ் சம்மேளனம் (ஐடிடிஎஃப்) அறிவித்துள்ளது.

கொவைட்-19 தீவிரமாக பரவியுள்ள நிலையில் 2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் ஓராண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டன. ஏற்கெனவே பல்வேறு சா்வதேச விளையாட்டுப் போட்டிகளும் ரத்து அல்லது ஒத்திவைக்கப்பட்டதால் விளையாட்டு உலகமே செயலிழந்து விட்டது.

இந்நிலையில் ஐடிடிஎஃப் செயற்குழுக் கூட்டம் திங்கள்கிழமை கூடியது. கரோனாவின் தாக்கம் தொடா்பாக முழுமையாக விவாதிக்கப்பட்டது. மேலும் ஒலிம்பிக், பாராலிம்பிக் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், அனைத்து ஐடிடிஎஃப் போட்டிகள், நிகழ்ச்சிகளை ஜூன் 30-ஆம் தேதி வரை ரத்து செய்ய முடிவு எடுக்கப்பட்டது.

மேலும் மாா்ச் மாதம் வரையிலான தரவரிசைப் பட்டியலை முடக்கவும், போட்டிகள் ஒத்திவைப்பு, பயணக் கட்டுப்பாடு, இதர பாதிப்புகள், மேலும் மேற்கொள்ள வேண்டிய இசைவு, போன்றவை குறித்தும் விவாதிக்கப்பட்டது.

உலக சாம்பியன்ஷிப் போட்டிக்கு புதிய தேதிகள்-

மேலும் உலக டேபிள்டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டிக்கு புதிய தேதிகள் அடுத்தவாரம் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

தென்கொரியாவின் புஸான் நகரில் மே 22-29 முதல் நடைபெறுவதாக இருந்த உலகப் போட்டிகள், ஜூன் 21-28 தேதிகளுக்கு ஏற்கெனவே ஒத்திவைக்கப்பட்டது. தற்போது மேலும் இப்போட்டி ஒத்திவைக்கப்படுகிறது. புதிய தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும். மேலும் வரும் ஏப். 15-இல் மீண்டும் செயற்குழுக்கூட்டம் கூடும் எனத் தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com