டெஸ்ட் தரவரிசை: இந்தியாவின் நெ.1 இடத்தைத் தட்டிப் பறித்த ஆஸ்திரேலியா

பாகிஸ்தான் மற்றும் நியூஸிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர்களில் முழு வெற்றியை அடைந்தது.
டெஸ்ட் தரவரிசை: இந்தியாவின் நெ.1 இடத்தைத் தட்டிப் பறித்த ஆஸ்திரேலியா

அக்டோபர் 2016 முதல் இந்திய அணி டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தைத் தக்கவைத்துக்கொண்டிருந்தது. ஆனால் தற்போது வெளியிடப்பட்டுள்ள ஐசிசி டெஸ்ட் தரவரிசப் பட்டியலில் இந்திய அணி மூன்றாம் இடத்துக்கு இறங்கிவிட்டது. ஆஸ்திரேலிய அணி முதலிடத்துக்கு முன்னேறிவிட்டது. புதுப்பிக்கப்பட்ட தரவரிசைப் பட்டியலில் இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.

நியூஸிலாந்து அணி 2-ம் இடத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது.

ஆஸ்திரேலிய அணி சமீபத்தில் பாகிஸ்தான் மற்றும் நியூஸிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர்களில் முழு வெற்றியை அடைந்தது. கடந்த வருடம் ஆஷஸ் தொடரை 2-2 எனச் சமன் செய்தது. இதனால் அந்த அணியால் முதல் இடத்துக்கு முன்னேற முடிந்தது.

டி20 தரவரிசையில் 2011 முதல் தரவரிசை வெளியிடப்பட்டு வருகிறது. இதில் முதல்தடவையாக ஆஸ்திரேலிய அணி முதல் இடத்தைப் பிடித்துள்ளது. இதனால் கடந்த 27 மாதங்களாக முதல் இடத்தைத் தக்கவைத்துக்கொண்டிருந்த பாகிஸ்தான் அணி பின்னடைவைச் சந்தித்துள்ளது. ஒருநாள் கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணி தொடர்ந்து முதல் இடத்தைத் தக்கவைத்துக்கொண்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com