வெளிநாட்டு லீக் போட்டிகளில் விளையாட அனுமதிக்க வேண்டும்: பிசிசிஐக்கு சுரேஷ் ரெய்னா கோரிக்கை

வெளிநாட்டு லீக் போட்டிகளில் விளையாடத் தங்களை அனுமதிக்க வேண்டும் என பிசிசிஐக்கு சுரேஷ் ரெய்னா கோரிக்கை விடுத்துள்ளார்.
வெளிநாட்டு லீக் போட்டிகளில் விளையாட அனுமதிக்க வேண்டும்: பிசிசிஐக்கு சுரேஷ் ரெய்னா கோரிக்கை

வெளிநாட்டு லீக் போட்டிகளில் விளையாடத் தங்களை அனுமதிக்க வேண்டும் என பிசிசிஐக்கு சுரேஷ் ரெய்னா கோரிக்கை விடுத்துள்ளார்.

இர்பான் பதானுடனான இன்ஸ்டகிராம் உரையாடலில் சுரேஷ் ரெய்னா கூறியதாவது:

பிசிசிஐ ஒப்பந்தப் பட்டியலில் இல்லாத வீரர்களை வெளிநாட்டு லீக் போட்டிகளில் விளையாட பிசிசிஐ அனுமதிக்க வேண்டும். நான், யூசுப் பதான், ராபின் உத்தப்பா போன்ற தரமான வீரர்கள் வெளிநாட்டு லீக் போட்டிகளில் விளையாடினால் மேலும் பல விஷயங்களைக் கற்றுக்கொள்ள முடியும். இரு லீக் போட்டிகளிலாவது விளையாட அனுமதிக்க வேண்டும்.

நாங்கள் பிசிசிஐயின் ஒப்பந்தப் பட்டியலில் கிடையாது. சிலருக்கு ஐபிஎல் ஒப்பந்தமும் கிடையாது. நாங்கள் சர்வதேச கிரிக்கெட்டிலும் விளையாடுவதில்லை. சர்வதேசத் தரத்தில் உள்ளது போன்ற ஒரு சவால், போட்டி மனப்பான்மை உள்ளூர் கிரிக்கெட்டில் கிடையாது. சிபிஎல் அல்லது பிக் பாஷ் லீக் போட்டிகளில் தரமான கிரிக்கெட்டில் ஈடுபடும்போது அது எங்களுக்குப் பெரிதும் உதவும்.

இதுபோன்ற லீக் போட்டிகளில் இதர நாட்டு விளையாட்டு வீரர்கள் விளையாடுகிறார்கள். இதன்மூலம் தங்களுடைய தேசிய அணியிலும் இடம்பிடித்துள்ளார்கள். நாங்கள் ஐபிஎல்-லில் விளையாடுகிறோம். ஆனால் தேர்வுக்குழுவினர் ஒரு 40-50 பேரை மட்டும் வைத்துக்கொண்டு மற்றவர்களுக்கு இந்திய அணியில் விளையாட வாய்ப்பளிப்பதில்லை. இதனால் எங்களிடம் மாற்றுத் திட்டம் இருப்பதில்லை. வெளிநாட்டு லீக் போட்டிகளில் விளையாடினால் எங்களுடைய ஆட்டத் திறனும் மேம்படும் என்று கூறியுள்ளார்.

ஓய்வு பெறாத இந்திய வீரர்களை வெளிநாட்டு லீக் போட்டிகளில் விளையாட பிசிசிஐ அனுமதிப்பதில்லை. ஓய்வை அறிவித்த பிறகு, டி10 போட்டியில் சேவாக்கும் குளோபல் டி20 கனடா போட்டியில் யுவ்ராஜ் சிங்கும் விளையாடியுள்ளார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com