திரும்ப வருவேன்: பரபரப்பை ஏற்படுத்தியுள்ள மைக் டைசன்

1985 முதல் 2005 வரை ஹெவிவெயிட் குத்துச்சண்டையில் சாதனையாளராக இருந்தவர், அமெரிக்காவைச் சேர்ந்த மைக் டைசன்.
திரும்ப வருவேன்: பரபரப்பை ஏற்படுத்தியுள்ள மைக் டைசன்

1985 முதல் 2005 வரை ஹெவிவெயிட் குத்துச்சண்டையில் சாதனையாளராக இருந்தவர், அமெரிக்காவைச் சேர்ந்த மைக் டைசன்.

20 வயதில் ஹெவிவெயிட் சாம்பியனாகி, உலக சாதனை படைத்தார். எதிராளியை நாக் அவுட் மூலமாக வீழ்த்துவதில் புகழ் பெற்றவர். இவரைத் தெரியாத விளையாட்டு ரசிகர்களே இருக்க முடியாது என்கிற அளவுக்குப் புகழ்பெற்றுள்ள மைக் டைசன் ஒரே ஒரு இன்ஸ்டகிராம் பதிவின் மூலம் ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள விடியோவில் மீண்டும் கடுமையாகப் பயிற்சி பெறும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. புத்திசாலித்தனமாகப் பயிற்சி எடுங்கள் என்று சொல்லும் டைசன், விடியோ முடிவில் நான் திரும்ப வருவேன் என்று கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 58 தொழில்முறை ஆட்டங்களில் 50-ல் வெற்றியை ருசித்தவர் டைசன். 2005-ல் ஓய்வுக்கு முன்பு கெவின் மெக்பிரைட்டுடன் தோற்றுப் போனார்.

கடந்த வாரமும் ஒரு விடியோவில் தான் மீண்டும் களத்துக்கு வருவது குறித்து சூசகமாகத் தெரிவித்திருந்தார் டைசன். நிஜமாகவே மீண்டும் தொழில்முறை ஆட்டங்களில் டைசன் களமிறங்கினால் நியூஸிலாந்தின் பில் வில்லியம்ஸ், ஆஸ்திரேலியாவின் பால் கெல்லன் போன்றோர் அவருக்குக் கடும் சவாலை அளிப்பார்கள்.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Mike Tyson (@miketyson) on

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com