டேபிள் டென்னிஸ் முன்னாள் சாம்பியன் மன்மீத் சிங் காலமானார்!

ஏமையோட்ராபிக் லேட்டரல் ஸ்க்ளிரோசிஸ் (amyotrophic lateral sclerosis) என்கிற நரம்புக் கோளாறு நோயால் கடந்த இரு வருடங்களாக மன்மீத் சிங் அவதிப்பட்டு வந்த நிலையில்
டேபிள் டென்னிஸ் முன்னாள் சாம்பியன் மன்மீத் சிங் காலமானார்!

டேபிள் டென்னிஸ் முன்னாள் சாம்பியன் மன்மீத் சிங் காலமானார். அவருக்கு வயது 58.

ஏமையோட்ராபிக் லேட்டரல் ஸ்க்ளிரோசிஸ் (amyotrophic lateral sclerosis) என்கிற நரம்புக் கோளாறு நோயால் கடந்த இரு வருடங்களாக மன்மீத் சிங் அவதிப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானார். (உலகின் தலைசிறந்த அறிவியலாளரான மறைந்த ஸ்டீபன் ஹாக்கிங்கும் இதே நோயால் இளமைப் பருவத்தில் பாதிக்கப்பட்டார்.)

தேசிய ஜூனியர் சாம்பியன், தேசிய இரட்டையர் சாம்பியன் ஆகிய பட்டங்களை முதலில் வென்ற மன்மீத் சிங், 1989-ல் ஸ்ரீராமைத் தோற்கடித்து ஒற்றையர் போட்டியில் தேசிய சாம்பியன் ஆனார். 1980களில் இந்தியாவின் மிகச்சிறந்த டேபிள் டென்னிஸ் வீரராக விளங்கினார். 1990களின் ஆரம்பத்தில் ஓய்வு பெற்றபிறகு கனடாவுக்குக் குடிபெயர்ந்துவிட்டார்.

கனடாவின் மாண்ட்ரியலில் மரணமடைந்த மன்மீத் சிங்குக்கு மனைவியும் இரு மகள்களும் உள்ளார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com