இரவு 7 மணிக்குப் பிறகு செல்போனைத் தொட வேண்டாம்: கெவின் பீட்டர்சன் அறிவுரை

இரவு 7 மணிக்குப் பிறகு காலையில் தூங்கி எழும் வரை செல்போனைத் தொட வேண்டாம்.
இரவு 7 மணிக்குப் பிறகு செல்போனைத் தொட வேண்டாம்: கெவின் பீட்டர்சன் அறிவுரை

கரோனா வைரஸுக்கு எதிராக ஒட்டுமொத்த உலகமும் போராடிக் கொண்டிருக்கிறது. இந்தத் தருணத்தில் உடலையும் மனத்தையும் சரியாகப் பாதுகாப்பதும் முக்கியக் கடமையாக உள்ளது.

இதற்கு சில யோசனைகளை வழங்குகிறார் முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன்.

தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அவர் தெரிவித்துள்ளதாவது:

உங்களால் இதைக் கடைப்பிடிக்க முடியுமா எனப் பாருங்கள்:

1. தினமும் ஒரு மணி நேரமாவது உடற்பயிற்சி செய்யுங்கள்.

2. சமூகவலைத்தளங்களில் உள்ள எல்லாச் செய்தித்தளங்களையும் நீக்கிவிடுங்கள். அதேபோன்று எதிர்மறை உணர்வுகளை வெளிப்படுத்துவர்களையும். அவற்றைப் பார்க்கவேண்டும் என்கிற அவசியமில்லை.

3. இரவு 7 மணிக்குப் பிறகு காலையில் தூங்கி எழும் வரை செல்போனைத் தொட வேண்டாம்.

இவை எனக்குப் பலனளிக்கின்றன என்று கூறியுள்ளார்.

சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவத் தொடங்கிய கரோனா வைரஸ் தற்போது உலகையே அச்சுறுத்தி வருகிறது. உலகம் முழுவதும் பரவியுள்ள இந்த வைரஸால் இதுவரை 3 லட்சத்து 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் உயிரிழந்துவிட்டனா். இந்தியாவைப் பொறுத்தவரை இதுவரை 81,900 பேருக்கு மேல் இந்த வைரஸின் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com