கிரிக்கெட் மீண்டும் தொடங்கும்போது ஐபிஎல் போட்டிக்கு முன்னுரிமை அளிக்கப்படும்: ரவி சாஸ்திரி

கரோனா பாதிப்பு முடிவடைந்து கிரிக்கெட் போட்டிகள் மீண்டும் தொடங்கும்போது ஐபிஎல் போட்டிக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என
கிரிக்கெட் மீண்டும் தொடங்கும்போது ஐபிஎல் போட்டிக்கு முன்னுரிமை அளிக்கப்படும்: ரவி சாஸ்திரி

கரோனா பாதிப்பு முடிவடைந்து கிரிக்கெட் போட்டிகள் மீண்டும் தொடங்கும்போது ஐபிஎல் போட்டிக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.

ஒரு பேட்டியில் அவர் கூறியதாவது:

உலகக் கோப்பைப் போட்டி, இரு நாடுகள் விளையாடும் தொடர் என இரண்டில் ஒன்றை மட்டும் தேர்வு செய்யச் சொன்னால் இரு நாடுகள் விளையாடும் தொடரையே தேர்வு செய்வோம். 15 நாடுகள் விமானத்தில் பயணிப்பதற்குப் பதிலாக ஒரு நாட்டு அணியினர் மட்டும் பறந்து வந்து ஓரிரு மைதானத்தில் மட்டும் விளையாடுவது பாதுகாப்பானது.

கிரிக்கெட் மீண்டும் தொடங்கும்போது ஐபிஎல் போட்டிக்கு முன்னுரிமை அளிப்போம். சர்வதேசப் போட்டிக்கும் ஐபிஎல் போட்டிக்கும் உள்ள வித்தியாசம் - ஒரிரு நகரங்களில் ஐபிஎல் போட்டியை நடத்தி முடித்துவிடலாம். அதேபோலத்தான் இரு நாடுகள் விளையாடும் தொடரிலும் நடக்கும். ஒரு நாட்டுக்கு மட்டும் பயணித்து குறிப்பிட்ட மைதானங்களில் மட்டும் விளையாடினால் போதும். இதுபோன்ற பார்வையைக் கொண்டு ஐசிசி முடிவெடுக்க வேண்டும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com