லஞ்சம் தராததால் ஜூனியர் அணிக்கு என்னைத் தேர்வு செய்யவில்லை; விராட் கோலி

தில்லி கிரிக்கெட் வட்டாரத்தில் நடக்கும் சில விஷயங்கள் நியாயமானதாக இருப்பதில்லை.
லஞ்சம் தராததால் ஜூனியர் அணிக்கு என்னைத் தேர்வு செய்யவில்லை; விராட் கோலி

ஜூனியர் அணிக்கு என்னைத் தேர்வு செய்ய லஞ்சம் கேட்டார்கள். அதைத் தராததால் என்னைத் தேர்வு செய்யவில்லை என்று விராட் கோலி கூறியுள்ளார்.

கால்பந்து வீரர் சுனில் சேத்ரியுடனான இன்ஸ்டகிராம் உரையாடலில் விராட் கோலி கூறியதாவது:

தில்லி கிரிக்கெட் வட்டாரத்தில் நடக்கும் சில விஷயங்கள் நியாயமானதாக இருப்பதில்லை. வீரர்களின் தேர்வு விஷயத்தில் விதிமுறைப்படி நடப்பதில்லை.

என்னிடம் திறமை இருந்தாலும் கொஞ்சம் ஏதாவது கொடுத்தால் ஜூனியர் அணிக்குத் தேர்வு செய்வதை உறுதி செய்வதாக கிரிக்கெட் சங்கத்தைச் சேர்ந்த ஒருவர் என் தந்தையிடம் கூறினார். நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த நேர்மையான மனிதரான என் தந்தை, வாழ்க்கையில் மிகவும் கஷ்டப்பட்டு வழக்கறிஞராக இருந்தாலும், ‘கொஞ்சம் கொடுத்தால்’ என்று அவர் சொன்னதைப் புரிந்துகொள்ளவில்லை. என் மகனைத் தேர்வு செய்வதாக இருந்தால் அது திறமையினால் தான் நடக்கவேண்டும். வேறெதுவும் தரமாட்டேன் என்று கூறிவிட்டார்.

இதனால் ஜூனியர் அணிக்கு நான் தேர்வாகவில்லை. நான் மிகவும் உடைந்து போனேன். கதறி அழுதேன். இச்சம்பவம் எனக்குப் பாடத்தைத் தந்தது. இந்த உலகம் இப்படித்தான் இயங்குகிறது என்பதைப் புரிந்துகொண்டேன். வாழ்க்கையில் முன்னேற விரும்பினால், யாரும் செய்யாததைச் செய்யவேண்டும். நான் வெற்றியாளராக மாறவேண்டும் என்றால் மகத்தான செயல்களைச் செய்பவனாக இருக்கவேண்டும். தன் நடவடிக்கையின் மூலம் என் தந்தை எனக்கு ஒரு நல்ல வழியைக் காட்டினார். இதுபோன்ற சிறிய விஷயங்கள் என் வாழ்க்கையில் மிகவும் தாக்கத்தை ஏற்படுத்தின என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com