இங்கிலாந்து சுற்றுப்பயணத்துக்கு எந்தவொரு வீரரையும் கட்டாயப்படுத்த மாட்டோம்: மே.இ. தீவுகள் கேப்டன்

இங்கிலாந்து சுற்றுப்பயணத்துக்கு எந்தவொரு வீரரையும் கட்டாயப்படுத்த மாட்டோம்  என மே.இ. தீவுகள் கேப்டன் ஹோல்டர் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து சுற்றுப்பயணத்துக்கு எந்தவொரு வீரரையும் கட்டாயப்படுத்த மாட்டோம்: மே.இ. தீவுகள் கேப்டன்

இங்கிலாந்து சுற்றுப்பயணத்துக்கு எந்தவொரு வீரரையும் கட்டாயப்படுத்த மாட்டோம்  என மே.இ. தீவுகள் கேப்டன் ஹோல்டர் தெரிவித்துள்ளார்.

கரோனா அச்சுறுத்தல் காரணமாக ஜூலை 1 வரை தொழில்முறை கிரிக்கெட் ஆட்டங்களுக்குத் தடை விதித்துள்ளது இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம். தி ஹண்ட்ரெட் போட்டியை அடுத்த வருடத்துக்கு ஒத்திவைத்துள்ளது. ஒரு இன்னிங்ஸில் 100 பந்துகள் கொண்ட இப்போட்டி ஜூலை 17 முதல் ஆகஸ்ட் 15 வரை நடைபெறும் என முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது.

ஜூலை 1 வரை தொழில்முறை கிரிக்கெட் ஆட்டங்களுக்குத் தடை விதித்துள்ளதால் இங்கிலாந்தில் நடைபெறுவதாக இருந்த இங்கிலாந்து - மேற்கிந்தியத் தீவுகள் இடையிலான டெஸ்ட் தொடர், இந்தியா - இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையிலான வெள்ளைப் பந்து கிரிக்கெட் ஆட்டங்கள் ஆகியவை ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டன. இந்த சீஸனில் விளையாட்டுப் போட்டிகளில் எதுவும் இங்கிலாந்தில் நடைபெறாமல் போனால் 3,553 கோடி நஷ்டம் ஏற்படும் என்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் தலைமை அதிகாரி டாம் ஹாரிஸன் கூறியிருந்தார்

ஆனால் சில அறிவிப்புகளால் இங்கிலாந்து கிரிக்கெட் திட்டங்களில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இங்கிலாந்துப் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்த ஓர் அறிவிப்பில், ஜூன் 1 முதல் இங்கிலாந்தில் படிப்படியாக விளையாட்டுப் போட்டிகளுக்கு அனுமதியளிக்கப்படும் என்று கூறினார். ரசிகர்கள் இல்லாத காலி மைதானத்தில் விளையாட்டுப் போட்டிகள் நடைபெறலாம். கரோனாவின் பாதிப்பைப் பொறுத்து இதற்கான அனுமதி தொடர்ந்து நீட்டிக்கப்படும். தொலைக்காட்சியில் விளையாட்டுப் போட்டிகளைப் பார்க்கும் இங்கிலாந்து மக்களின் மனநிலை மேம்படும் மற்றும் நிதிச் சிக்கலை ஓரளவு போக்கவும் இந்த நடவடிக்கை உதவும் என்றார்.

இதையடுத்து இந்த வாரம் முதல் இங்கிலாந்து வீரர்கள் பயிற்சிக்குத் திரும்பவுள்ளார்கள். இங்கிலாந்தின் ஏழு விளையாட்டு மையங்களில் டெஸ்ட் தொடருக்காகத் தேர்வு செய்யப்பட்டுள்ள 30 வீரர்கள் தனிப்பட்ட முறையில் பயிற்சியை ஆரம்பிப்பார்கள். அனைத்து வீரர்களும் பங்கேற்கும் முழு வலைப்பயிற்சி இரு வாரங்களுக்குப் பிறகு தொடங்கும். இந்த நடைமுறையில் வீரர்களின் பாதுகாப்பில் முழு அக்கறை செலுத்தப்படும் என்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இந்த மாத இறுதியில் இங்கிலாந்து - மே.இ. தீவுகள் ஆகிய அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரின் அட்டவணை வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் ஒரு பேட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணியின் கேப்டன் ஹோல்டர் கூறியதாவது:

அடுத்தக்கட்ட நடவடிக்கையில் ஈடுபடும் ஒவ்வொரு வீரரும் செளகரியாக உணரவேண்டும். இங்கிலாந்துச் சுற்றுப்பயணத்துக்காக விமானத்தில் பறக்கும்போது அது பாதுகாப்பான சூழலில் அமையவேண்டும். என்னைப் பொறுத்தவரை நான் யாரையும் கட்டாயப்படுத்த மாட்டேன். பாதுகாப்பான சூழலில் மட்டுமே இங்கிலாந்துக்குச் செல்வோம் என மே.இ. தீவுகள் கிரிக்கெட் வாரியம் உறுதி அளித்துள்ளது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com