போதைப் பொருள் பறிமுதல்: ஹாட்ரிக் எடுத்த இலங்கை கிரிக்கெட் வீரர் கைது

வங்கதேசத்துக்கு எதிராக அறிமுகமான வேகப்பந்துவீச்சாளர் மதுசங்கா, முதல் ஒருநாள் ஆட்டத்திலேயே ஹாட்ரிக் எடுத்து...
(படம் - AFP)
(படம் - AFP)

சட்டவிரோதமாகப் போதைப் பொருள்களை வைத்திருந்த இலங்கை கிரிக்கெட் வீரர் சிநேகன் மதுசங்காவை கொழும்பு காவல்துறையினர் கைது செய்துள்ளார்கள்.

ஜனவரி 2018-ல், வங்கதேசத்துக்கு எதிராக அறிமுகமான வேகப்பந்துவீச்சாளர் மதுசங்கா, முதல் ஒருநாள் ஆட்டத்திலேயே ஹாட்ரிக் எடுத்து சாதனை படைத்தார். 25 வயது மதுசங்கா, இதுவரை 1 ஒருநாள், 2 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார்.

இந்நிலையில் இலங்கையில் கரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் பன்னாலா பகுதியில் தன் நண்பருடன் காரில் சென்றுகொண்டிருந்த மதுசங்காவை நிறுத்தி, காவலர்கள் சோதனையிட்டார்கள். அப்போது, காருக்குள் போதைப்பொருள்கள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து காருக்குள் வைக்கப்பட்டிருந்த 2 கிராம் ஹெராயினைக் காவலர்கள் பறிமுதல் செய்தார்கள்.

இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், மதுசங்காவைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா். மதுசங்காவுக்கு இரு வாரம் நீதிமன்றக் காவல் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com