சச்சின் விக்கெட்டை திட்டமிட்டு வீழ்த்திய தோனி: 2010 ஐபிஎல் கோப்பையை வென்ற ரகசியம்

2010-ம் ஆண்டு தனது முதல் ஐபிஎல் கோப்பையைக் கைப்பற்றியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.
சச்சின் விக்கெட்டை திட்டமிட்டு வீழ்த்திய தோனி: 2010 ஐபிஎல் கோப்பையை வென்ற ரகசியம்

2010-ம் ஆண்டு தனது முதல் ஐபிஎல் கோப்பையைக் கைப்பற்றியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

ஐபிஎல் இறுதிச்சுற்றில் சென்னை அணிக்கு எதிராக 169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற நிலைமையில் சென்று கொண்டிருந்த மும்பை இந்தியன்ஸ் அணி, சச்சின் விக்கெட்டை இழந்ததால் தடுமாறி தோல்வியடைந்தது.

சச்சின் விக்கெட்டை வீழ்த்தியதில் தோனியின் பங்களிப்பு குறித்து அப்போது அணியில் இடம்பெற்றிருந்த ஜகாதி ஒரு பேட்டியில் கூறியதாவது:

என்னுடைய முதல் இரு ஓவர்களில் 21 ரன்களைக் கொடுத்தேன். இடக்கை பேட்ஸ்மேன் அபிஷேக் நாயர் விளையாடிக் கொண்டிருந்ததால் இப்போது நடு ஓவர்களில் நான் பந்துவீச வேண்டும் என்றார் தோனி.

சச்சின், ராயுடு, பொலார்ட் ஆகிய வலது கை பேட்ஸ்மேன்களுக்காக என்னைக் காக்க வைத்தார். மும்பை வலது கை பேட்ஸ்மேன்கள், இடக்கை பந்துவீச்சாளர்களிடம் பலவீனமாக உள்ளதாக நாங்கள் முன்பே எங்கள் திட்டங்களைத் தயாரித்து வைத்திருந்தோம் என்றார்.

தோனியின் யோசனை, சென்னை அணிக்குச் சாதகமாக மாறியது. மூன்றாவது ஓவரை வீசிய ஜகாதி, 5 ரன்கள் மட்டுமே கொடுத்து சச்சின் விக்கெட்டை வீழ்த்தினார். இரு பந்துகள் கழித்து செளரப் திவாரியும் ஆட்டமிழந்தார்.

இதனால் சென்னை அணி 2010 ஐபிஎல் இறுதிச்சுற்றை 22 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com