பிரையன் லாரா என் பந்துவீச்சை சமாளிக்கத் தடுமாறினார்: பாகிஸ்தான் பந்துவீச்சாளர்

பிரையன் லாரா உள்ளிட்ட இடக்கை பேட்ஸ்மேன்கள் என் பந்துவீச்சை எதிர்கொள்ளத் தடுமாறியுள்ளார்கள் என...
பிரையன் லாரா என் பந்துவீச்சை சமாளிக்கத் தடுமாறினார்: பாகிஸ்தான் பந்துவீச்சாளர்

பிரையன் லாரா உள்ளிட்ட இடக்கை பேட்ஸ்மேன்கள் என் பந்துவீச்சை எதிர்கொள்ளத் தடுமாறியுள்ளார்கள் என பாகிஸ்தான் ஆல்ரவுண்டர் முகமது ஹபீஸ் கூறியுள்ளார்.

ஒரு பேட்டியில் அவர் கூறியதாவது:

இடக்கை பேட்ஸ்மேன்கள் என் பந்துவீச்சை எதிர்கொள்ள எப்போதும் தடுமாறுவார்கள். வலது கை பேட்ஸ்மேன்களுக்கும் நான் நன்றாகப் பந்துவீசியுள்ளேன். இரு வகை பேட்ஸ்மேன்களுக்கும் என்னுடைய எகானமி ரேட் கிட்டத்தட்ட ஒன்றாகவே இருக்கும். பிரையன் லாராவையும் நான் வீழ்த்தியுள்ளேன்.

என் பந்துவீச்சை எதிர்கொள்ள சிரமமாக உள்ளதாக லாரா என்னிடம் கூறியுள்ளார். சுழற்பந்துவீச்சாளர்களை அருமையாக அவர் எதிர்கொள்வார். உலகத் தரமான பேட்ஸ்மேன் அவர்.

டி20 உலகக் கோப்பைப் போட்டி அடுத்த வருடத்துக்குத் தள்ளிவைக்கப்பட்டாலும் பாகிஸ்தான் அணிக்காக விளையாட நான் தயாராக உள்ளேன் என்று கூறியுள்ளார்.

டிசம்பர் 2018-ல் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார் ஹபீஸ். டி20 உலகக் கோப்பைக்குப் பிறகு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற முடிவெடுத்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com